விஷ்வ துளசி என்ற படம் வெளியாவதற்கு முன்னாலேயே பத்திரிகைகளில் எல்லாம் நல்ல படம் என்பதான கருத்து பரப்பப் பட்டுவிட்டது. சினிமா வாசனையே இல்லாத ஒரு பெண்மணி இயக்கியிருக்கிறார் என்பதும் 'அழகியும்' 'அழகனும்' நடிக்கும் படமென்பதாலும் விளம்பரத்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் அதற்காக தமிழ் சினிமாவே பார்த்ததில்லை என்று பேட்டி கொடுப்பது கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவே பார்க்காதவர் தமிழ் சினிமா எதற்காக எடுக்க வேண்டும்? மற்றவர்கள் அதைப் பார்க்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா? இது போன்ற மேல்தட்டு சினிமாக்காரர்களுக்கு அந்தக்கவலையும் இல்லை. ஏதாவது விருது வாங்குவது மட்டுமே கூட அவர்களுக்குப் போதும். எதற்கெல்லாமோ போராடும் சினிமாக்காரர்களும் இதைக்குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. இணைய நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? (இந்தக் கேள்விக்குக் காரணமுண்டு. தமிழ்ப் புத்தகங்களே படிக்காதவர்கள் தானே தமிழின் சிறந்த எழுத்தாளர்கள்!)
2004-10-02
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அது யாரந்த எழுத்தாளர்கள்...?
பிறகென்ன இணைய நன்பர்களிடம் கேள்விகேட்டுவிட்டு. நீங்களே பதிலையும் கூறிவிட்டிரே. அதுதான் தமிழ்ப் புத்தகங்களே படிக்காதவர்கள் தானே தமிழின் சிறந்த எழுத்தாளர் என்று. அதேபோல தழிழ் சினிமா பார்க்காதவர் ஒருவேளை சிறப்பான திரைப்படம் எடுப்பார் என்று பத்திரிகைநன்பர்கள் கருதியிக்கக்கூடும்
நானும் இதைப்பற்றி நினதை;தேன். தமிழ் படம் ஒன்றும் ஆகப்பெரிய தரத்தில் இல்லைத்தான் என்றாலும் அப்படிப் பேட்டி கொடுக்கிறபோது ஒருமாதிரித்தான் இருக்கிறது. கொஞ்சம் அவநம்பிக்கை எழுகிறது நல்ல படமா இருக்குமா என்று. கனவு மெய்ப்பட வேண்டும் என்றொரு படம் வந்தது. அது நல்ல கருவா இருக்கலாம் ஆனா ஒரு அமெச்சூர் படம் இத்தனைக்கும் அதே இயக்குநரின் (ஜானகி) பழைய படம்: குட்டி நன்றாக இருந்தும், இரண்டாவது வாய்க்கவில்லை ஸோ அதே பிரச்சினை இப் படத்துக்கும் உண்டு. எதற்கும் நல்லதையே எதிர்பார்ப்போமே!
Post a Comment