* * *
இனிய தமிழ் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்.
மதி அவர்கள் தந்த கடமையால் இன்னும் ஏழுநாட்களுக்கு நான் தொடர்ந்து கட்டாயமா வலைப்பதிக்க வேண்டியிருக்கு. நட்சத்திர நாயகர் காசி தமிழ் மணத்தின் வளர்ச்சிக்கான ஓட்டெடுப்புகள் மற்றும் அறிவுரைப் பதிவுகளாலேயே ஒருவாரமும் அசத்திவிட்டார். நான் என்ன செய்யப்போகிறேனோ தெரியவில்லை.
முதலில் ஒரு கடமையாக,
இணையத்தில் தமிழை அரங்கேற்றி அழகு பார்த்த பேராசிரியர் நா. கோவிந்தசாமி,
மதுரை திட்டம் வழி தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இடம்பெறச் செய்த கல்யாண சுந்தரம்,
.
இணையத் தமிழர்கள் இன்று தமிழை வாசிக்க அடித்தளமிட்ட முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன்,
ஆவரங்கால் எழுத்துரு மூலம் தமிழ் யூனிகோட் எழுத்துருக்களுக்கு முகவரி தந்த சின்னத்துரை சிறீவாஸ்,
தமிழ் யூனிகோட் செயலாக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றி வருவதோடு அனைவருக்கும் பொதுவான இயங்கு எழுத்துரு தந்த உமர்,
எளிமையான செயலிகளை உருவாக்கி பலகூறாகப் பிரிந்திருந்த தமிழ் எழுத்துருக்களை எல்லோரும் வாசிக்கவும் தமிழில் எழுதவும் வகை செய்துவரும் சுரதா,
திசைகள் மூலமாக தமிழ் இலக்கிய வாசலை இணையத்தமிழர்களுக்காகத் திறந்ததோடு, தமிழ் வலைப்பதிவுகளுக்கு அறிமுகம் தந்த மாலன்,
மரத்தடி குழுமம், மரத்தடி இணையம் என புதிய பல புதிய இணைய எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துத் தந்ததோடு, தமிழ் வலைப்திவுகளை பட்டியலிட்டுத் திரட்டி ஓரிடத்தில் சேர்த்து வைத்து இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மதி,
அந்தத் தொகுப்புகளை நேரடியாக வாசகர் வாசிக்கச்செய்ய தமிழ்மணம் என்னும் திரட்டியை உருவாக்கி தமிழ் வலைப்பதிவுகளுக்கு பரவலான வாசகவட்டத்தை உருவாக்கித் தந்து அதை நித்தம் மெருகேற்றி வரும் காசி,
தமிழ் விக்கிபீடியாவை அறிமுகப் படுத்தி கணித்தமிழ்க் களஞ்சியம் உருவாக வழி வகுத்துள்ள வெங்கட்,
எ-கலப்பை, தமிழ் உலாவி என கணினியைத் தமிழ்மயமாக்க உழைக்கும் 'தமிழா' குழுவினர்,
குறள் தமிழ்ச்செயலி வழி தமிழ் பிழைதிருத்தி மற்றும் குரல் வழி வாசிப்பானை அறிமுகம் செய்துள்ள குறள்சாப்ட் குழுவினர்,
அமுதம் ஆன்டோ பீட்டர், அழகி பா.விஸ்வநாதன் என கணித்தமிழ் கருவிகள் தந்த இளைஞர்கள்,
என இணையத்தில் தமிழுக்கு நல்லதொரு இடம் கிடைக்க உழைத்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
விடுபட்டவர்கள் மற்றும் தகவல் பிழைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
2005-03-27
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
வாங்க ஸ்டார், வாங்க, இந்த ஒரு வாரமும் திரு வாரமாக போக வாழ்த்துக்க்கள்
அதே!
நன்றி அனுராக் அவர்களே!
நாம் இவர்களின் அளப்பரிய உழைப்பை ஏதோ ஒரு வகையில் அன்றாடம் பயன்படுத்துகிறோம். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியை காட்டிலும் வேறு என்ன கைமாறு செய்துவிட இயலும். இந்த பட்டியலில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் பென்லங்வேஜ் செண்டரின் டாக்டர் ஷி்ப்மன், டாக்டர் ரங்கநாதன் என இவர்கள் இருவரையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய மேல் செய்திகள் எவையும் என்னிடம் இல்லை. தெரிந்த நண்பர்கள் இங்கே மேலிட வேண்டுகிறேன்.
அன்புடன்
மன்னை மாதேவன்
வாங்க, வாங்க
வாழ்க்கையில் சவால்கள் வந்தால் போராடி ஜெயிக்கலாம். ஆரோக்கியம் குன்றி, வாழ்க்கையே ச்வாலாய் ஆன உங்களுக்கு, இணையம் தரும் இந்த நிழல், மிக அருமையான வடிகால்.
கடவுளிடம் என் பிரார்த்தனைகளும், இந்த வாரமும், மேலும் உங்கள் மொத்த வாழ்வும் சிறக்க என் வணக்கங்களும்.
அனுராக், மூக்கன் சொன்னது புரியவில்லை. நீங்கள் உடல் நலனுடன் பல்லாண்டு தமிழ் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனிடன் வேண்டுகிறேன். நட்சத்திர பதிவுக்கு வந்திருக்கீங்க. கலக்குங்க.
விஜய்,
இங்கே பார்த்தீர்களா..??
http://www.thamizmanam.com/tamilblogs/starintro-auto.php?days=
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
மூக்கன்! ஆரோக்கியப் பிரச்சினை பெரிதாக ஏதுமில்லை. சிறு தடங்கல். அவ்வளவே. தவிர சவால்கள் இல்லாத வாழ்க்கை ருசிக்காது. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு? பதிவுகளைப் பற்றி மட்டும் பேசலாமே.
மகிழ்ச்சி அனுராக்.
அப்படியே ஆகட்டும்.
உங்களுடைய தனி அறிமுகத்தில் அதை படித்தவுடன் கஷ்டமாக இருந்தது. என்னுடைய நெருங்கிய உறவினருக்கு, இதைப் போலவே பிரச்சினை வந்ததால், தன் வீரியத்தை நானறிவேன். அதை நீங்கள் பொதுவில் எழுதியதால், தையொட்டி நானும் எழுதவேண்டி வந்தது. தவறாக ஏதும் எழுதி இருந்தால் பொருட்படுத்த வேண்டாம். நட்சத்திர பதிவுகள் தொடரட்டும்.
நன்றி.
மூக்கன் குறிப்பிட்ட காரணத்தால் அறிமுகத்தை இப்போதுதான் படித்தேன். மிகவும் நெஞ்சை தொட்டுவிட்டது. மேலே பேசுவது உங்களுக்கு விருப்பமானது அல்ல என்று தெரிகிறது. அதனால் மூக்கனை போல உங்கள் வாழ்வு, அதன் அத்தனை இன்பங்கள் சந்தோஷங்களுடன் சிறக்க வாழ்த்துக்கள்! இந்த வாராமும்!
அன்புள்ள அனுராக், தாங்களை தனியாக மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ள தொடுப்பை தேடினேன். கிடைக்கவில்லை. தாங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா? என்னுடைய மின்னஞ்சல் njvijay@halwacity.com.
அனுராக்,
மேலே நண்பர்கள் வாழ்த்தியதுபோல, இந்த வாரம் நட்சத்திரத்திற்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக.
உங்கள் சுய அறிமுகக்குறிப்பு வாசித்தபோது மிகவும் மனதைப் பாதித்தது. உங்கள் நம்பிக்கை, நீங்கள் விரும்பியவை அனைத்தும் நடந்தேற மனதார வாழ்த்துக்கின்றேன். இந்த ஒரு வாரத்தில் நிரம்ப எழுதுங்கள்.
உங்கள் குட்டிப்பையனுக்கும் ஒரு ஹலோ என் சார்பில் சொல்லிவிடுங்கள். நன்றி.
Post a Comment