2005-01-24

1. வாழ்த்து

இன்று
கோமதி நாயகனாகும் குப்ஸாமிக்கு வாழ்த்துக்கள்!
கொஸப்பேட்டை டாட் காம் வழி
கொஸப்பேட்டை குப்ஸாமியின் குசும்புகள்
குட்த்த கேவிஆர்
எங்கிற வலை நண்பருக்கு
என் இதயம் நிறைந்த மணவிழா வாழ்த்துக்கள்.

2. வலைப்பதிவு பிரச்சினை

பிளாக்கரில் பல்வேறு பிரச்சினைகள் பற்றி நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். என் பிரச்சினை என்னவென்றால் எனது சில பதிவுகள் முன்பின்னாக இடம் மாறி விழுகின்றன. 25ம் தேதி நள்ளிரவில் இந்திய நேரப்படி 12.30 க்கு (அதாவது 26ம் தேதி அதிகாலை 0.30 a.m.) பதிந்த பதிவு 24ம் தேதி பதிந்ததாகக் காட்டுகிறது. அதுவும் 24ம் தேதி பதிந்த பதிவுக்கு பின்பான பதிவை முந்தைய பதிவாகக் காட்டுகிறது. 26ம் தேதி பதிந்த பதிவில் 24ம் தேதிய பதிவின் தலைப்புக் காட்டப் படவில்லை. 24ம் தேதிய பதிவில் 26ம் தேதி பதிந்ததன் தலைப்பு இருக்கிறது.முகப்புப் பக்கம் பார்த்தால் (Home) வரிசை சரியாகவே உள்ளது. இது என்ன குழப்பம்?

3. ஒரு கேள்வி

Firefox, thamizha. உலாவிகளில் இயங்கு எழுத்துருவான .eot வேலை செய்யுமா? தெரிந்தவர்கள் / சோதித்தவர்கள் சொல்லுங்கள்.

3 comments:

சன்னாசி said...

சமீபகாலமாக நான் உபயோகிப்பது ஃபயர்ஃபாக்ஸ் உலாவி தான். அதில் தானியங்கி எழுத்துருக்கள் வேலை செய்கின்றன. பதிவை justify செய்யாமல் இட்டால் சரியாகத் தெரியும், justify செய்தால் உடைந்து தெரியுமென நினைக்கிறேன்....

நவன் பகவதி said...

3. ஃபயர்ஃபாக்ஸில் யுனிகோடு எழுத்துக்கள் வேலை செய்யும். ஆனால் (நாம் உபயோகிக்கும்) ".eot" தானியங்கி எழுத்துக்கள் வேலை செய்யாது.

காசி (Kasi) said...

இரண்டு நாளாக ப்ளாக்ஸ்பாட் சேவையில் ஏதோ கோளாறு இருப்பதாக உணர்கிறேன். செய்தியோடை திரட்டுவது அநியாயத்துக்கும் மெதுவாக நடக்கிறது. இப்போது சரியான மாதிரித் தெரியுது, பாக்கலாம்.