2006-10-20

கடைசி பதிவு

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

இத்துடன் அகரவலை தன் பயணத்தை முடித்துக்கொள்கிறது.

2004 செப்டம்பர் 24 அன்று முதல் பதிவை துவக்கிய அகரவலையின் பயணம் இன்று நிறைவு பெறுகிறது.

இதுவரை வாசித்த விமர்சித்த அனைவருக்கும் நன்றி.

அபூர்வ ராகங்கள்

அதிசய ராகமாக தமிழ்த் திரையுலகில் பூத்த ஸ்ரீவித்யா என்ற தாரகை நேற்று உதிர்ந்தது. பாலசந்தரின் இயக்கத்தில் ஸ்ரீவித்யாவின் அபூர்வமான நடிப்பில் கமல் நாயகனாக நடித்த புகழ்பெற்ற படத்தில் தான் ரஜனிகாந்த் அறிமுகமானார். குணச்சித்திர தாரகையாக வலம் வந்த ஸ்ரீவித்யா புகழ்பெற்ற கர்நாடக சங்கீதப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி.

சமீபகாலமாக திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த ஸ்ரீவித்யா மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். புற் றுநோய் தாக்கி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு காலமானார். இன்று காலை பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது வீட்டிலும் பின்னர் பொது அரங்கு ஒன்றிலும் வைக்கப் பட்டபின் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழில் சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர் திரைப்படத்திலும் மலையாளத்தில் நடிகர் சத்யன் நடித்த சட்டம்பிக்கவல என்ற படத்திலும் தன் திரையுலக வாழ்வை ஆரம்பித்த போது ஸ்ரீவித்யாவுக்கு 13 வயது.

அபூர்வராகங்களின் போது கமலஹாசனால் காதலிக்கப்பட்ட அவர், குடும்பத்தினரின் சம்மதம் கிடைக்காததால் திருமணம் தாமதமான நிலையில் கமல் வாணியைத் திருமணம் செய்து கொண்டதால் இவரும் தனக்கு அச்சூழலில் ஆறுதலாக இருந்த ஜார்ஜ் தாமஸ் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.

நோய் கடுமையாகி மருத்துவமனையில் இருந்த போது கடைசி தினங்களில் தன்னைக்காண திரையுலக நண்பர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். ஆயினும் அந்நிலையிலும் தன்னைக் காண வந்த கமலஹாசனை மட்டும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையாக மட்டுமல்லாமல் நர்த்தகியாகவும் புகழ் பெற்றிருந்த ஸ்ரீவித்யா தன் இறுதிக்காலத்தில் ஒரு நடனப்பள்ளி நடத்த விரும்பியிருந்தாராம். அது நிறைவேறாத ஆசையாகவே போய்விட்டது.

உலகப்புகழ் சங்கீதப் பாடகியின் மகளான ஸ்ரீவித்யாவும் நல்ல பாடகி. சில திரைப்படங்களிலும் பாடியுள்ள அவர் நான்கு வருடங்களுக்கு முன் நண்பர்களின் வற்புறுத்தலால் கேரளாவில் தானே இயற்றிய கீர்த்தனங்களுடன் சங்கீதக்கச்சேரி நிகழ்த்தினார். அதற்குக்கிடைத்த பாராட்டுக்களால் தொடர்ந்து பல கச்சேரிகள் பாடினார்.

கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை இவர் இருமுறை பெற்றுள்ளார். மாநில அரசு மரியாதையோடு நடைபெற்ற இவரது இறுதிச்சடங்கை மூன்று மலையாள தொலைக்காட்சி சேனல்கள் இன்று காலை முதலே நேரடி ஒளிபரப்புச் செய்தன.

கணவனைப் பிரிந்து தனியாகவே வாழ்ந்து வந்த ஸ்ரீவித்யாவுக்கு குழந்தைகள் இல்லை என்பதே மிகப்பெரிய சோகமாக இருந்திருக்கிறது.

2006-10-17

பாட்டுக் கேட்க!

இதில் உள்ள பாடல் classmates என்ற புதிய திரைப்படப்பாடல். உள்ளூர் கேபிள்களில் ஒரு நாளைக்கு 50 முறையாவது ஒளிபரப்பாகி வருகிறது. பாடலின் இனிமையோடு காட்சியில் நகைச்சுவையும் மிகுந்த ரசனைக்குரியவை. கேட்கக்கேட்க பார்க்கப்பார்க்க இனிமை.

இந்தப்படத்தில் நான்கு நாயகர்கள். பாக்கியராஜ் மகளுடன் டூயட் பாடிய பிரித்விராஜ், பிரித்வியின் அண்ணன் இந்திரஜித் (இவர்கள் மறைந்த மலையாள நடிகர் சுகுமாரனின் புதல்வர்கள்), என்மனவானில் ஊமைப்பையன் ஜெயசூர்யா, சித்திரம்பேசுதடி நரேன்.

நாயகி எனமனவானில் ஊமைப்பெண் காவ்யா. கேரள பாக்கியராஜ் பாலச்சந்திரமேனன், கேரளாவின் வடிவேலு (கவுண்டமணி?) ஜகதி மற்றும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட்.



2006-10-16

யாருக்கு முதலிடம்?

இது தேர்தல் நேரம். உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து விட்டன. தேர்தல் எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் நாளை எதிர்பார்க்கும் வேளை இது. இதற்கிடையில் முக்கியமான மற்றொரு தேர்தலின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அது என்ன?

ஐஆர்எஸ் என்னும் இந்திய இதழியல் வாசக கணக்கெடுப்பு 2006 முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இந்த முடிவுகளின் படி முந்தைய கணக்கெடுப்பிலிருந்து இதழ்களின் வாசக எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி தென்படுகிறது.

முதல் இடத்தில் இருக்கும் ஸரஸ் ஸலில் இந்தி இதழ் 63 லட்சம் வாசக எண்ணிக்கை கொண்டுள்ளது. ஆயினும் இது முந்தைய எண்ணிக்கையான 73.61 லட்சத்திலிருந்து பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இரண்டாவது இடத்திலிருக்கும் மலையாள இதழான வனிதா 35.16 லட்சத்திலிருந்து 33.1 லட்சமாகக் குறைந்துள்ளது. 31.93 லட்சத்திலிருந்து 27.7 லட்சமாக இறங்கியுள்ள க்ரிஹஷோபா இந்தி இதழுக்கு மூன்றாமிடம்.

37.59 லட்சம் வாசகர்களைக் கொண்டிருந்த குங்குமம் 26.3 லட்சம் வாசகர்களாக குறைந்தாலும் தமிழில் முதலாவது இடத்தையும் இந்திய அளவில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்திலிருக்கும் குமுதம் தமிழில் இரண்டாவது இடம் பெற்று வாசக எண்ணிக்கையில் 30.71 லட்சத்திலிருந்து 25.4 லட்சமாக குறைந்துள்ளது. .

28.49 லட்சத்திலிருந்து 24.4 லட்சம் வாசகர்களாக குறைந்துள்ள இந்தியா டுடேயின் இந்திப் பதிப்பு ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏழாவது இடத்திலிருக்கும் ஆனந்தவிகடன் 25.5 லட்சத்திலிருந்து 23.4 லட்சத்துக்கு சென்று தமிழில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆங்கில இதழ்களில் India Today முதலிடம், Reader’s Digest இரண்டாமிடம், General Knowledge Today மூன்றாவது இடமும் பெற்றுள்ளன.

தமிழில் பிரம்மாண்டமான தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமும் ஏராளமான இலவச இணைப்பு பரிசுகளின் மூலமும் பெற்ற முதலிடத்தை குங்குமம் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வாசக ஈர்ப்பையும் அது தொடர்ந்து பேண முடிந்திருக்கிறது. நீண்ட கால முதலிடத்தை இழந்த குமுதம் அதை மீண்டும் பெற முயற்சித்ததாக தெரியவில்லை. விகடன் எப்போதுமே குமுதத்திற்கு பின்னால் நிற்பதிலேயே திருப்திப் பட்டுக்கொள்கிறது.

ஒரு முக்கிய அறிவிப்பு

2006-10-15

சில குறும்படங்கள்

சில தமிழ் குறும்படங்கள் இங்கே,,,

ஒலியும் ஒளியும்

2006-10-12

ரஜினி - ஆல்பம்-2

இன்னும் சில சிவாஜி பட ஸ்டில்கள். ரஜினி, ஸ்ரேயா.

முந்தைய ஆல்பம் இங்கே








சிவாஜி படக்காட்சிகள்



2006-10-11

தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள்

உலகின் அதிசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலை top universities தளம் வெளியிட்டுள்ளது. அது குறித்த வெற்றியின் பதிவு இங்கே.

இங்கே நான் கூற வந்தது இந்தியப் பல்கலைக் கழகங்கள் எத்தனை இதில் இடம் பெற்றுள்ளன என்பதைப் பற்றியது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் இருநூறு பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் மூன்று மட்டும் இடம் பெற்றுள்ளன.

தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 50 வது இடத்தில் இருந்த ஐஐடி இந்த ஆண்டு 57 வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 84 வது இடத்தில் இருந்த ஐஐஎம் இந்த ஆண்டு 68 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 192 வது இடத்தில் இருந்த ஜவகர்லால் நேரு பல்கலை இந்த ஆண்டு 183 வது இடத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக் கழகங்களின் நிலையே இதுவென்றால் மற்ற பல்கலைக்கழகங்கள் உலகத்தரத்தில் எந்த இடத்தில் இருக்கும்?

கணினித்துறையில் சாதனைகளைப் புரிந்து வரும் இந்தியர்கள் இந்த உலகத்தரமில்லாத பல்கலைக்கழகங்களில் படித்து வந்தவர்களே என்று எண்ணும்போது வியப்பாகவும் இருக்கிறது.

சிவாஜியில் ரஜினி-ஆல்பம்-1












இயக்குநர் ஷங்கர் இயக்கும் சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் பல்வேறு தோற்றங்கள்

2006-10-04

மழை! கவிதை

மழை!

மேகப்படைகளின்
மோதலில் சிதறிய
ரத்தத்துளிகள்!

அகரவலையில் இது 100 வது பதிவு!

2006-10-01

கதைக்கவிதை -தேன்கூடுபோட்டிக்கு-4

விடுதலை?

பத்து மாதம்
பந்தச் சிறையில்...
இடையில் ஏதோ வெளிச்சம்.
அவள் பெண்ணென்று அறிய
அநீதியான சோதனை...
அறிந்ததும்
ஏதோ
விஷமாத்திரை
விரைந்து வந்தது...
எப்படியோ
தப்பிப் பிழைத்து
விடுதலைக்காக
காத்திருப்பு.
அந்த நாளும் வந்தது.
சுதந்திரக்
காற்றைச்
சுவாசிக்கும் ஆர்வத்தில்
அவள் அறியாமல் போனது
வெளியே
காத்திருக்கும்
கள்ளிப் பால் சொட்டு.

இருவரிக்கதை -தேன்கூடுபோட்டிக்கு-3

விடுதலை!

அந்த ஆயுள் தண்டனைக் கைதிக்கு இன்று விடுதலை நாள்.
சிறைக்கதவுகள் திறக்கப்படு முன்பே அவன் உயிர் விடுதலை பெற்றிருந்தது.

ஒருவரிக்கதை -தேன்கூடுபோட்டிக்கு-2

விடுதலை!

கிழவியின் உடலில் சிறைப் பட்டிருந்த உயிர் அவளின் நிறைவேறாத காதலின் நாயகனான பக்கத்து வீட்டுக் கிழவர் வந்து வாயில் நீரூற்றியதும் விடுதலை பெற்று சென்றது.

கவிதை -தேன்கூடுபோட்டிக்கு-1

விடுதலை?

நாம் நிரந்தரச் சிறைவாசிகள்
நமக்கெப்போது விடுதலை?

கருவறையிலிருந்து விடுதலையாகி
கல்லறைக்குச் செல்லுமுன்னே
இடையில்
இன்னுமொரு சிறைச்சாலை

சாதிக்கொடுமைகளிலிருந்து
மதமோதல்களிலிருந்து
ஊழல்களில் இருந்து
வன்கொடுமைகளிடமிருந்து
எப்போது விடுதலை

தேசத்தின் விடுதலை
அன்னியர்களிடமிருந்து
இந்த
தேகத்தின் விடுதலை
வன்முறைகளிடமிருந்து

எப்போது கிடைக்கும் விடுதலை?

தேன்கூடு போட்டி விவாதங்கள் தொடர்ச்சி...

தேன்கூடு போட்டி விவாதங்கள் என்ற என் முந்தைய பதிவில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளோடு தொடர்புடைய சில விளக்கங்கள் தேன்கூடு வலைப்பதிவில் அளிக்கப் பட்டிருக்கின்றன.

அதன் சில பகுதிகள்:

இந்த போட்டிகளின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று:

நல்ல எழுத்துக்களை
வலைப்பதிவுகளில் ஊக்குவிப்பது, புதிய வலைப்பதிவர்களுக்கு தமிழில் எழுதும்
ஆர்வத்தினை உருவாக்குவது.

தேன்கூடு.காம் - தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி,
தொகுப்பகம் மற்றும் வலைவாசல் என்ற முறையில் நல்ல எழுத்துக்களை வலைப்பதிவுகளில்
ஊக்குவிப்பது எங்களின் முக்கிய நோக்கமாகக் கருதுகிறோம்.

ஒவ்வொரு முறையும்
நாங்கள் குறிப்பிடுவது போல, வலைப்பதிவாளர்களின் திறமையை அவர்கள் பாணியில் அவர்கள்
பதிவிலேயே வெளிப்படுத்துவதில் உள்ள சுவாரசி்யம் வேறெதிலும் இல்லை என்று நிச்சயம்
நம்புகிறோம். ஆக்கங்களில் கூட, வலைப்பதிவுகளின் அனைத்து சாத்தியக்கூறுகளையும்
எதிர்பார்க்கிறோம். அது பிளாஷ் மென்பொருளில் செய்யப்பட்டு பதியப்படுவதாக
இருக்கலாம்; பாட் கேஸ்டிக் ஆக இருக்கலாம்; புகைப்படங்களாக இருக்கலாம்; வீடியோவாக
இருக்கலாம்; அல்லது கவிதை கதை போன்ற அனைத்து படைப்புக்கூறுகளாகவும் இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும், போட்டிக்கான தலைப்பின் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே
முக்கியம்.

பெயர் வெளியிடாமல், ஆக்கங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு
பதிப்பிப்பது போன்ற முறைகள் இந்த நோக்கங்களுக்கு தடையாக இருக்கும் என்பதினை மனதில்
கொள்ள வேண்டுகிறோம்.

போட்டியில் பங்கேற்பவர்களின் ஆக்கத்திற்கு உடனடியாக
கிடைக்கும், பின்னூட்டங்கள்; விமர்சனங்கள் இவையே இங்கு போட்டியாளர்களுக்கு
கிடைக்கும் உடனடி பரிசுகள் என்று கருதுகிறோம்.

வாக்கெடுப்பின் முறையிலுள்ள
குறைகளைக் குறைக்கும் விதமாக, இந்த மாதத்தின் சில நேரங்களில் சோதனையில் இருந்த
முறைகள் வரும் மாதப் போட்டியில் முழுமையாக இருக்கும். இது கள்ள வோட்டுகளின்
எண்ணிக்கையை முற்றிலும் குறைக்ககூடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் நிச்சயம்
குறைக்கக்கூடும்.( உதா: செப்டம்பர் போட்டியின், கடைசி நாள் கடைசி சில
மணித்துளிகளில் ஒரே கணிணியிலிருந்து மீண்டும் மீண்டும் வாக்கெடுப்பில் கலந்து
கொண்டு போட்டியின் நோக்கத்தினை, எங்களின் முயற்சி மற்றும் உழைப்பினை,
போட்டியாளர்களின் ஆர்வத்தினை வேடிக்கையாக்க முயற்சி செய்திட்ட சிலரின் முயற்சிகளைத்
தவிர்க்கக் கூடும்.)

வரும் மாதங்களின் போட்டிகளில் வேறு சில மாற்றங்களும்
உங்கள் ஆதரவுடன் செய்ய நினைத்திருக்கிறோம்!

ஆகவே வலைப்பதிவுகளில் படைப்புக்களின் தர மேம்பாட்டுக்கு இந்தப் போட்டி உதவ வேண்டும் என்ற தேன்கூடு நண்பர்களின் நோக்கம் போட்டிப் படைப்புகள் வலைப்பதிவிலேயே இருக்க வேண்டியதன் காரணமாகிறது.

அவ்வாறாக இருந்தாலும் வலைப்பதிவுகளுக்கு தொடர்பேயில்லாத படைப்பாளர்களின் நண்பர்கள் வாக்களிப்பில் மட்டும் கலந்து கொண்டு வாக்களிப்பது என்பது சில நேரங்களில் நேர்மையற்ற முடிவுகளைத் தர வாய்ப்புண்டு.

மேலும் ஐபி தடை போன்ற தொழில் நுட்ப விவகாரங்கள் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதும் கேள்விக்குறியே. அதில் பல்வேறு பிரச்சினைகளும் உள்ளன.

இதற்கு மாற்றாக குறைந்த பட்சம் ஒரு இயங்கும் வலைப்பதிவைச் சொந்தமாகக் கொண்ட வலைப்பதிவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதித்தால் தொடர்பற்ற பிற நபர்கள் வாக்களிப்பதை தவிர்க்க முடியும்.

இதற்கெல்லாம் மேலானது படைப்பாளர்கள் தங்கள் படைப்பின் மீது வைக்கும் நம்பிக்கை. அதுவே இப்போட்டிக்கு வெற்றியை தேடித்தரும்.

வழக்கம் போல ஆர்வமுள்ள நண்பர்கள் படைப்புகளை விமர்சனம் செய்வது போட்டிக்கு சுவை கூட்டும். படைப்புகளை திரட்டிகளில் அவ்வப்போது வாசிக்காத, கவனிக்காதவர்களும் படைப்பை தேடி வாசிக்க வைப்பது விமர்சனங்களே. படைப்பை உருவாக்குவது போலவே விமர்சனமும் ஒரு தனித்திறமை. அதில் தெரியும் ஆர்வமும் படைப்பை பற்றிய சிறிய அறிமுகக் குறிப்புகளும் படைப்பாளிக்கும் ஊக்கமூட்டுவன. மதிப்பெண்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.

இம்மாத போட்டிக்கு ஆசாத் அவர்கள் விடுதலை என்ற தலைப்பை தந்திருக்கிறார். அனைவரும் விடுதலையோடு விளையாடுவோம்.

2006-09-29

படைப்பும் பார்வையும்

1

தேன்கூடு தளத்தில் லிப்ட் என்ற சொல்லுக்கு தரப்பட்டிருந்த பொருள் இந்தக் கவிதைக்கு வித்திட்டது. போட்டிக்கு அனுப்பிய பின் சில திருத்தங்கள் தோன்றியது. ஆனால் விதிமுறைகளின் படி பதிவில் திருத்தம் செய்யவில்லை. திருத்தப்பட்ட முழுக்கவிதை இங்கே.


கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

*
கொஞ்சம் லிப்ட்
கிடைக்குமா?
சாலையோரமாய்
அல்ல
வாழ்வினோரமாய்
காத்திருந்தேன்.

ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைக்கும் கூட்டம்
பெருகிவிட்ட காலத்தில்
ஏணிகள் அஞ்சுவது
இயற்கைதான்.

ஏறிவிட ஏணியில்லை
ஏற்றிவிட யாருமில்லை
வீற்றிருந்த காலமெல்லாம்
வீணாகிப் போனதிங்கே...

படிக்காத பாடங்கள்
படித்தபின்னே
புத்தியென்னும்
உத்தி தெளியும்

ஏணிவேண்டாம்
எவரும்வேண்டாம்
தன்னம்பிக்கை எனும்
தளரா உறுதி கூட
ஏணியாக ஏற்றிவிடும்...

தாமதமாய்
தானுணர்ந்து
ஏறுகிறேன்
வாழ்க்கையெனும்
ஏறுபாதையில்...

எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்...


[கவிதை]

விமர்சகர்கள் பார்வையில்:

சோம்பேறி பையன் விமர்சனம்:

வாழ்க்கை மீதுள்ள நம்பிக்கை பற்றிய கவிதை.

எளிமையான, சிற்சிறு வரிகள் கவிதைக்கு பலம்.
"எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்... "
போன்றவை ரசிக்க வைக்கின்றன.

கவிதை, நம்பிக்கை !!

முரட்டுக் காளை விமர்சனம்:

"சிகரம் எட்டுமென்ற நம்பிக்கையே நமக்கும் உரமாய்"

பின்னூட்ட விமர்சனம்:

#முரட்டுக்காளை கூறுவது:

கவிதை வாசித்தேன். அருமை.

*
2

போட்டிக்கான தலைப்பை வாசித்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக எழுதத் தோன்றியது. சிறுகதையின் இலக்கணங்களை உள்ளடக்கியதாக, துவக்கம், களம், சஸ்பென்ஸ், முடிவு என எல்லாம் அமைந்த ஒரு கதை, வாசித்த பிறகு கதை நிகழ்வு வாசகரின் மனத்திரையில் ஓடவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதியது. நோக்கத்தில் வெற்றி கண்டதாகவே கருதுகிறேன்.


கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

வேகமாகச் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" என்ற இளம்பெண் மறுநாள் சாலையோரம் கற்பழித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவளுக்கு எய்ட்ஸ்.


[இருவரிக்கதை]

விமர்சகர்கள் பார்வையில்:

சோம்பேறி பையன் விமர்சனம்:

இரண்டு வரிகளில் ஒரு அருமையான கதை.
க்ளைமேக்ஸ் நச்.
தேர்ந்தெடுத்த வார்த்தைகள், களம், முடிவு என அசத்துகிறது கதை.
நிச்சயம் படிக்க வேண்டும். கதை, கலக்கல் !!

முரட்டுக் காளை விமர்சனம்:

"நிமிடத்தில் படிச்சிடலாம்.
வியப்பு தான் அகல சிலநேரம் பிடிக்கும்."

பின்னூட்ட விமர்சனம்:

# அமுதன் கூறுவது:

நல்ல கதை....
இரண்டு வரிகளில் நச்சென்று இருக்கிறது.....
இருவரிக் கதை என்ற பெயரில் ஹைக்கூ கதை முயற்சி....
வாழ்த்துக்கள்,....

# நெல்லை சிவா கூறுவது:

பக்கம் பக்கமாக எழுதி கவர முற்பட்டுக் கொண்டிருக்க,
இரண்டே வரிகளில்,
இதயம் கவருவது திறமைதான். வாழ்த்துக்கள்

# முரட்டுக்காளை கூறுவது:

தலைப்பு கொடுத்தவரே கொஞ்சம் நிறைய எழுதியிருக்கிறார்.
நீங்க இப்படி 2 மார்க் பதில் எழுதுற மாதிரி ஆக்கீட்டிங்களே.. :-)
ஆனா சூப்பர்.

# Dubukku கூறுவது:

very nice attempt. have voted for this cheers :)

*
வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி!

தேன்கூடு போட்டி விவாதங்கள்!

தேன்கூடு-தமிழோவியம் இணைந்து நடத்தும் படைப்பாக்கப் போட்டி தமிழ் வலைப்பதிவர்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டும் போட்டி. இந்த நோக்கமும் முயற்சியும் மிக உயர்வானது.

இப்போட்டியின் வெற்றியாளர்கள் வலைப்பதிவர்களால் வாக்களிப்பு முறையில் தேர்வு செய்யப் படுகின்றனர். இதிலுள்ள சில பிரச்சினைகளால் இப்போது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. பல பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட செல்வாக்கு, நண்பர்கள், ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதாக சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இதில் ஓரளவு உண்மையும் இருக்கக்கூடும்.

ஆரம்பத்திலேயே பதிவர்கள் போட்டிப் படைப்புகளைத் தங்கள் பதிவுகளிலேயே வெளியிட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை தான். அதனாலேயே ஆரம்ப போட்டிகளில் நான் கலந்து கொள்ளவில்லை. பெயரறியாமல் தான் படைப்புகளுக்கான வாக்களிப்பு நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது கூட சிலர் ரகசிய பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்ற போதும்!

எனினும் இம்முறை தலைப்பு தந்த உத்வேகத்தில் எழுதிய சின்னஞ் சிறுகதையை சும்மா பதிவிட வேண்டாமே என்று போட்டிக்கான இணைப்பில் பதிவு செய்தேன். அங்கே கண்ட lift என்ற சொல்லுக்கான பொருள் கவிதைக்கான விதை தூவியதில் கவிதையும் தயார்.

எனினும் தொடர்கதையை விளம்பரப் படுத்திய நான் போட்டிக்கான படைப்புகளுக்கு எந்தச்சிறு விளம்பரமும், பிரச்சாரமும் செய்யாதிருக்க கவனமாக இருந்தேன். உண்மையில் அந்தப் படைப்புகளைப் படித்தவர்கள் மிகச்சிலரே! திரட்டிகளில் பார்த்து, நேரடியாக போட்டி பட்டியலில் இருந்து படித்து எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் என்று அறியும் நோக்கமிருந்தது.

எனது படைப்புகளுக்கு 15 மற்றும் 14 வாக்குகள் விழுந்துள்ளன. இதில் முக்கியமாக சோம்பேறி பையன் மற்றும் முரட்டுக்காளை ஆகியோர் எழுதிய விமர்சனப் பதிவுகளில் இந்தக் கதை பற்றிய உயர்வான புகழுரை கேட்டே பலரும் வாசித்திருக்க வேண்டும்/வாக்களித்திருக்க வேண்டும்.

இவ்வளவு படைப்புகள் வந்துள்ள நிலையில் கவனம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் படைப்புகளுக்காக என்றில்லாமல் படைப்பாளிகளுக்காக பெறப்படும் கவனம் நேர்மையான போட்டிகளுக்கு இடையூறானதுதான்.

எனவே போட்டியை நடத்தும் தேன்கூடு-தமிழோவியம் நிர்வாகத்தினர் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்வது நல்லது.

பிற போட்டிகள் பலவும் நடுவர்களால் மட்டுமே தேர்வு செய்யப்படும் நிலையில் மாறுபட்ட முறையில் பதிவர்களின் பங்களிப்புடன் தேர்வு செய்யப்படும் வாக்குப் பதிவு முறை நீக்கப்பட அவசியமில்லை. வாக்களிப்பு முறைதான் இந்தப் போட்டிக்கான தனித்துவம் என்பதால் இதை சில மாற்றங்களுடன் மேற்கொள்ளலாம்.

மேலும் கதை, கவிதை, கட்டுரை அனைத்தையும் ஒரே போட்டிக்கான வரைமுறையில் வைத்திருப்பது சரியானதாகத் தோன்றவில்லை. தொடர்பதிவுகள் போட்டிக்கு அனுமதிக்கப்படுவதும் சரியெனத் தோன்றவில்லை. ஒரே தலைப்பில் கதை, கவிதை, கட்டுரைகளைத் தனித்தனியாகத் தேர்வு செய்யலாம்.

போட்டிக்கான படைப்புகள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு பொதுவான ஒரு வலைத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் இடப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படலாம். பெயருக்கு பதிலாக எண்கள் மட்டுமே பதிவில் இடப்பட வேண்டும். உதாரணமாக கதை-1, கதை-2, கவிதை-1 இப்படி.

சூசகமாகவேனும் சில பெயர்கள் வந்துவிடலாம் என்பதால் அங்கே பின்னூட்டங்கள் அனுமதிக்கப் படாதிருப்பதே நல்லது. அதற்கு மேலும் ரகசியப் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டார்கள், தங்கள் படைப்புகளில் நம்பிக்கை வைப்பார்கள் என்றும் பதிவர்களின் நேர்மையில் நம்பிக்கை வைத்து இத்தகைய மாற்றங்களை பரிந்துரைக்க விரும்புகிறேன்.

மேலும் மொத்தமாக விமர்சனம் செய்கிறவர்கள் மதிப்பெண் இடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதுவும் சில முன்முடிவுகளை வாக்குப் பதிவின்போது ஏற்படுத்திவிட நேரும்.

இத்தகைய மாற்றங்களை மேற்கொள்வதின் மூலம் எதிர்வரும் போட்டிகளில் படைப்புகளின் தேர்வில் ஓரளவுக்கு சர்ச்சைகளைத் தவிர்க்கலாம்.

2006-09-24

ஒரு கதை! ஒரு போட்டி!!

கதை கேட்பது என்பது சிறு வயதில் எல்லோருக்குமே மிகவும் விருப்பமான விஷயம் தான். கூட்டுக் குடும்பமாக எல்லோரும் இருந்த காலத்தில் தாத்தா பாட்டிகள் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்வது வழக்கமாக இருந்தது. இன்றைய அவசரமான உலகில் குடும்பங்கள் சிதைந்தும் பிரிந்தும் பெரியவர்கள் தனியாக குழந்தைகள் தனியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தமாகி விட்டது. இன்றைய குழந்தைகளுக்கு பெரியவர்களிடம், தங்கள் தாத்தா பாட்டியிடம் கதை கேட்கும் பாக்கியம் இல்லை.

இன்று அவர்களுக்கு கார்ட்டூன் சானல்கள் சொல்லும் கதைகள் தான் தஞ்சம். அன்று பெரியவர்கள் சொன்ன கதைகளில் லாஜிக் இல்லாமலிருக்கலாம். மூடநம்பிக்கைகள் மிகைப்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் கதை என்னும் வற்றாத ஊற்று கடந்து செல்லும் பரிமாணங்கள் எட்டாத உயரத்துக்கு செல்லும். டிஜிட்டல் கதைகளின் கிராபிக்ஸ் மாயங்களைவிட பழங்கதைகளில் ஜாலங்கள் அதிகம்.

என்றோ கேட்டகதைகளின் நினைவலைகளை மீட்டி சொந்தக் கற்பனை கலந்து புதிய களத்தில் சற்றே பெரிய கதையாகச் செய்தேன். வலைப்பதிவில் ஒரு புதிய முயற்சியாக அதை சிறுசிறு பாகங்களாக ஒரு பதிவில் இட்டேன். கதையும் முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு அத்தியாயம் பாக்கி.

இங்கே...
கதைகேட்பதில் ஆர்வமுள்ள, புதிர்களை விடுவிக்க துடிப்புள்ள அன்பு நண்பர்களுக்காக என் தொடர்கதையிலிருந்து ஒரு சிறு போட்டி.

கதை இங்கே

போட்டிக்கான கேள்வி(கள்) இதுதான்

1) கதையின் ஆரம்பத்தில் வரும் பிணம் எவ்வாறு இறந்திருக்கக் கூடும்?

2) நாகமணியை கிழவர் என்ன செய்திருப்பார்?

கற்பனைக் குதிரையை ஓடவிடுங்கள்!

2006-09-17

ஜோதிகா திரைப்புதிர்

அட யாருப்பா அது? கல்யாணமான பொண்ண லுக் விடறது?

கேள்வியை நன்றாகப் படித்து பதிலை மண்டபத்தில் (சாரி மறுமொழியில்) வைத்து விடுங்கள்...

1. ஜோதிகாவின் திரையுலக முதல் நாயகன் யார்?

2. தமிழில் ஜோ நடித்த முதல் படம் எது

3. ஜோதிகா சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருது பெற்ற படம் எது?

4. ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்த அயல்நாட்டு நடிகர் யார்?

5. நக்மாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடைப்பட்ட மற்ற சகோதரி யார்?

6. ஜானகி என்ற கதாபாத்திரத்தில் ஜோ நடித்த படம் எது?

7. ஜோதிகா சூர்யாவுடன் நடித்த முதல் படம் எது?
மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்காமல் காப்பியடிக்காமல் பதில் கூறும் புலவருக்கு இம்சை அரசன் பரிசுகளை 100 சவுக்கடிகளாக வழங்குவார்.

*

அமானுஷ்ய ஆவியின் திருஷ்டி பட்ட மோகினி இங்கே...

2006-09-16

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

தேன்கூடுபோட்டி - செப்டம்பர் 2006

கொஞ்சம் லிப்ட்
கிடைக்குமா?
சாலையோரமாய்
அல்ல
வாழ்க்கையோரமாய்
காத்திருந்தேன்.

ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைக்கும் கூட்டம்
பெருகிவிட்ட காலத்தில்
ஏணிகள் அஞ்சுவது
இயற்கைதான்.

தன்னம்பிக்கை எனும்
தளரா உறுதி கூட
ஏணியாக ஏற்றிவிடும்...

தாமதமாய்
தானுணர்ந்து
ஏறுகிறேன்
வாழ்க்கையெனும்
ஏறுபாதையில்...

எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்...

-வலைஞன்


வகை: கவிதை.

தேன்கூடு போட்டிக்கு

தலைப்பு: கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
படைப்பு: வலைஞன்.

வேகமாகச் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" என்ற இளம்பெண் மறுநாள் சாலையோரம் கற்பழித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவளுக்கு எய்ட்ஸ்.


வகை: கதை [இருவரிக்கதை]

2006-09-15

தமிழ்மணம் சில பிரச்சினைகள்!

தமிழ்மணத்தில் முகப்புப் பக்கம் சிறப்பாக செயல்படுகிறது. மறுமொழி நிலவரங்களையும் உடனுக்குடன் காட்டுவது சிறப்பு.

இடுகைகள் பக்கத்திலும் எல்லாம் சுபமே. ஆனால் இடுகைகள் பக்கத்தின் ஒரு பிரிவான இடுகைகளில் தேட என்னும் பகுதி இப்போது செயலிழந்து விட்டது போலத் தோன்றுகிறது. அதில் சொற்களை இட்டுத் தேடும்போது பெரும்பாலும் தகவல் காணப்படவில்லை என்ற தகவலே வருகிறது. சில தினங்களுக்கு முன் தமிழ்மணத்தில் திரட்டப்பட்ட அறியப்பட்ட சொற்களைக்கொண்ட பதிவுகளைக்கூட பல சமயங்களில் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இது சற்று மேம்படுத்தப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

பதிவு கருவிப்பட்டைக்கு வழங்கப் பட்டிருக்கும் கோடிங் பிளாக்கர் தவிர சொந்த இணையப்பக்கத்தில் வலைப்பதிவு செய்யும் வேர்ட்பிரஸ் பயனாளிகளுக்கு மட்டுமே செயல்படுத்த முடிகிறது. blogsome வலைப்பதிவு சேவைக்கான கோடிங் நான் உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறேன். கருவிப்பட்டையும் தெரிகிறது. ஆனாலும் மறுமொழி நிலவரம் சேவை இதுவரை வழங்கப்படவில்லை.

பிளாக்கர் தவிர பிற வலைப்பதிவுகளில் உள்ள comment-feed வசதியைக் கொண்டு மறுமொழி நிலவரத்தை பதிவு கருவிப்பட்டை இல்லாமலே செயல் படுத்த இயலும். அதைச் செயல் படுத்தினால் பல வலைப்பதிவாளர்கள் பலன் பெறுவார்கள்.

அடுத்து முழுப்பட்டியல் என்னும் பகுதி. இதில் எந்த முறையில் வலைப்பதிவுகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன என்று தெரியவில்லை. அகர வரிசையிலும் ஒழுங்காக தொகுக்கப் படவில்லை. பல பதிவுகளை இதில் தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

முன்பு பழைய தமிழ்மணம் முதல் பதிப்பில் இது மிகச்சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அகரவரிசையில், காலவரிசையில் பதிவுகளை அடுக்கி நாடுவாரியாக பதிவுகளை காண முடிந்தது. அது ஏன் மாற்றப்பட்டது என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை.

தமிழ்மணத்தின் சிறப்பியல்புகளுக்கு முன் இவை சிறிய குறைபாடுகள்தான். ஆனால் அவற்றையும் களைந்து தமிழ்மணம் முழுமைபெற வேண்டும் என்ற ஆவல்தான்.

புதிய பூங்கா வலையிதழுக்கு வாழ்த்துக்கள்.

(ஒரு நினைவூட்டல்: பதிவுகள் பகுதியில் வலைப்பதிவு திரட்டிகள் தலைப்பில் புதிய தமிழ்ப்பதிவுகள் திரட்டிக்கான [http://tamilblogs.com/] சுட்டி இணைக்கப்படவில்லை)
*
வாசகர்களுக்கு:

விஜயகாந்தும் போலீசும்

தொடர்கதை படிக்க விரும்புவோருக்கு:

தொடர்கதை : ராசமணி

பிளாக்கர் பீட்டாவில்...

பிளாக்கர் பதிவுகளை பிளாக்கர் பீட்டாவுக்கு மாற்றியதால் தங்கள் பதிவுகள் இழந்ததாக பல வலைப்பதிவர்களின் புலம்பல் கேட்க முடிந்தது. எச்சரிக்கையாக தங்கள் gmail கணக்கைக்கொண்டு புதிய beta பதிவு ஒன்றை உருவாக்கி சோதித்துப் பார்த்து விட்டு பதிவு மாற்றம் செய்திருக்க வேண்டாமோ.? (திட்டப்போறாங்க!)

புதிய பிளாக்கர் பீட்டாவில் என்னால் முடிந்த எல்லா சாத்தியக்கூறுகளையும் சோதித்துப் பார்த்த வலைப்பதிவு இது. இது ஒரு திரட்டியாக செயல்படுகிறது. வடிவமைப்பும் செய்ய முடிகிறது. ஆனால் இதுவரை தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் தரும் நிரல்களை இணைக்க முடியவில்லை. html எடிட் வசதி இப்போதைக்கு முழுமையாக செயல்படவில்லை. விரைவில் சரியாகலாம்.

பீட்டா திரட்டியை நீங்களும் பாருங்கள்

2006-09-14

பயர்பாக்சும் தமிழும்

இன்று இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற மைக்ரோசாப்ட் வலையுலாவிக்கு மாற்றாக பயர்பாக்ஸ் என்ற திறவூற்று வலையுலாவி பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பொதுவில் பயர்பாக்ஸ் ஒரு சிறந்த வலையுலாவியாக இருந்தாலும் புதிய இணைய அலங்காரங்கள் உள்ள பக்கங்களில் தமிழ் போன்ற மொழிகளை குறிப்பாக யூனிகோடு எழுத்துருக்களை சரியாகக் காண முடிவதில்லை என்பது மிக முக்கியமான குறைபாடாக இருந்து வருகிறது.

வலைப்பதிவுகளில் இன்று பல புதிய வடிவமைப்புகள் உருவாகி வருகின்றன. அவற்றை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியில் அழகாகக் காண முடிகிற அளவுக்கு பயர்பாக்ஸ்சில் காண முடிவதில்லை. ஆனாலும் அதன் பிற பயன்பாடுகள் அதை சிறந்த உலவியாக நிலைநிறுத்துகின்றன. ஆனால் மொழியைச் சரியாகக் காட்ட முடிவதில்லை என்பது பெரிய குறைதானே?

இதற்கு என்ன மாற்று என்று சிந்திக்கும்போது இப்போது பத்மா என்ற இணைப்பு நீட்சி இதற்கு தீர்வாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இதிலும் சில குறைபாடுகள் சொல்லப் படுகிறது.

அதேசமயம் அனைத்து பிரச்சினைகளும் வலைப்பக்க நிரல்களால் உருவாவதால் அதே நிரல்களில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.

முதலாவதாக பல வலைப்பதிவுகளில் தலைப்புப்பகுதி எழுத்துக்கள் இழைபிரிந்து நிற்கின்றன. இதற்குக் காரணமாக அமைவது letter-spacing என்ற பண்பை style sheet எனப்படும் அலங்கரிப்பு/வடிவ சீரமைப்பு நிரலில் இணைப்பது தான். எனவே இந்த வரியை/நீக்கி விடுவதன் மூலம் இயல்பான எழுத்து இடைவெளியை உலாவிகள் உணர்ந்து கொள்ளும். சில இடங்களில் line-space என்ற பண்பும் பிரச்சினை செய்யலாம். அதையும் நீக்கி சோதிக்கலாம். ஆனால் சில வலைவடிவமைப்புகளில் !important என்று குறிப்பிட்டு மேற்கண்ட letter-spacing பண்பை வைத்திருப்பார்கள் அதில் மாற்றம் செய்தால் பக்க அமைப்பில் குளறுபடிகள் நேரலாம். அதை சற்று நிதானமாக சோதித்து வேறு மாற்றங்களையும் செயல்படுத்த வேண்டும்.

அடுத்ததாக மற்றும் முக்கியமாக text-align:justify என்ற பண்பை பயன்படுத்தும்போது இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் பக்கம் அழகு பெறுகிறது. அதேசமயம் பயர்பாக்ஸ்சில் எல்லா எழுத்துக்களும் கலைந்து குப்பையாகி விடும். இதற்கு ஒரு எளிய நிரலை style sheet இல் இணைப்பதின் மூலம் தீர்வு காணலாம்.

முதலில் text-align:justify என்ற பண்பு style sheet இல் எங்கெங்கு காணப்படுகிறதோ அவற்றை நீக்கி விட வேண்டும். அடுத்து பின்வரும் நிரலை style sheet இன் ஆரம்பத்தில் இணைக்க வேண்டும்.
----------------
body, p{
text-align: justify;
}
html>body, p{
/* only firefox can read this. IE can't */
text-align: left;
}
----------------
இதன் மூலம் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் text-align:justify செயல்படவும் பயர்பாக்ஸ்சில் பழையபடி text-align:left ஆகவும் இருப்பதால் எழுத்துக்கள் சரியாக வெளிப்படுகின்றன.

இவை முன்பு பயர்பாக்ஸ் பற்றிய விவாதங்கள் நடைபெற்ற போது நண்பர்களால் முன்வைக்கப்பட்ட பல யோசனைகளில் மிக எளிமையானவையும் வெற்றிகரமானவையுமாக என்னால் சோதித்தறியப் பட்டவை.

இந்த மாற்றங்கள் நான் வெற்றிகரமாக என் வலைப்திவுகளில் பயன்படுத்தி செயல்படுத்தியவை. எனவே நிச்சயமாக இவை பயன்தரும்.

நீங்களும் முயன்று பாருங்கள்.

2006-09-12

பயர்பாக்ஸ் கேள்வி

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் பயர்பாக்சில் தமிழ் எழுத்துக்கள் குழம்பித் தெரிவது பற்றி பெரிய விவாதமே நடைபெற்றது. இப்போது அதைப்பற்றி பெரிதாக பேசப்படக் காணவில்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் பயர்பாக்சில் இந்த பிரச்சினைகள் தீர்க்கப் பட்டு விட்டதா? யாருக்காவது ஏதாவது பதிவுகள் இப்போதும் குழம்பித் தெரிகின்றதா? தீர்வு கண்டவர்கள் அது பற்றி இங்கு மறுமொழியிடுங்கள்.

*

அப்படியே கவிதை படிக்க ஆர்வமுள்ளவர்கள் படித்ததில் பிடித்த இரண்டு கவிதைகளை ஒரு பார்வை பார்த்து விடலாம். ஒன்று இம்சை அரசன் இயக்குநர் சிம்புதேவனின் கிட்டி வெளாடுவோம் வர்ரியா? (நன்றி பாலபாரதி). மற்றொன்று வாரமலர் புகழ் க. சந்திரகலாவின் பறந்து போன பறவைக்கு...

2006-09-03

ரஜினி புதிர் 2 விடை

கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு
மனுசன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு (2)
ஐயா மேலே சாமி வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும் (2)

அந்திபட்ட நேரத்திலே சந்திரன ஒருத்தன் பார்த்தான்
அவன் கூட வந்தவனும் சூரியன் தான் அதுன்னான்
சந்திரனா சூரியனா சண்ட வந்து சேர்ந்ததய்யா
இந்த நேரம் பார்த்து..எதுத்தால ஒரு மனுசன்
தள்ளாடி தள்ளாடி தல கீழா நடந்து வந்தான்
சண்டையிட்ட ரெண்டு பேரும் சாட்சியா அவன வச்சி
சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு என்னான்..
எனக்கொன்னும் தெரியாது நா வெளியூருன்னு பூட்டான் அவன்

என்ன தான் போட்டாலும் நிதானம் தான் தப்பாது
இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதையா
கன்னியை தாயென்பேன் கிழவியை கன்னி என்பேன்
கன்ரோலு கொஞ்சம் கூட கொறையாதையா
அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
யாரு பெரியவன்டா டேய் தம்பி

[கடவுள்...]


ஒரு பெண்ண பார்த்தேன்.. என்னம்மா கல்யாணம் ஆச்சான்னேன்..
ஆகலன்னா.. குழந்த குட்டி இருக்கான்னேன்...குடுத்தா பளார்னு
நா விடுவேனா.. அடுத்த பெண்ண பார்த்து
முன்கூட்டியே குழந்த குட்டி இருக்கான்னேன்
ஆமா! ரெண்டு கொழந்த இருக்குன்னா...
அப்புறம் தான்..கல்யாணம் ஆச்சான்ன்னு கேட்டேன்..
அன்னைக்கு தான் தங்க பல்லு கட்டவேண்டிய அவசியம் வந்தது.

விஸ்கிய போட்டேன்னா இங்கிலிசு பாட்டெடுப்பேன்
சாராயம் உள்ளே போனா தமிழ் பாட்டு.
கள்ள குடிச்சேன்னா நாடோடி பாட்டு வரும்
கல்லுக்கும் டான்சு வரும் அத கேட்டு.
அட ஆகாயம் கால் மேலே...பூலோகம் கை மேலே
ஆடி காட்டுகிறேன் வா நைனா..

[கடவுள்...]


படம்: போக்கிரிராஜா

ரஜினி, ஸ்ரீதேவி, ராதிகா, முத்துராமன் நடித்தது.

1. பாடல் கேட்க

2. mp3 download

2006-09-01

ரஜினி சினிமா - புதிர் 2

Image and video hosting by TinyPic

ரஜினியின் அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற

வந்தேண்டா பால்காரன்... பாடலில்

மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க

என்று வைரமுத்து எழுதியிருக்கிறார்.

கண்ணதாசன் சொன்ன பாடல் எந்தப் (படப்)பாடல்?

ரஜினி புதிர்-1 விடை

சரியான விடை எழுதியவர்கள் சிங்கை நாதன்(Senthil), karthi(Anonymous), (rajkumar) , (Ganesh), (ஊமை), (Kannan), (Balamurugan), (காழியன்) ஆகியோர். நன்றி

சமீபத்தில் தொலைக்காட்சி யொன்றில் ரஜினி நடித்த தமிழ் சினிமாவைப் பார்க்க நேர்ந்தது. இதுவரை பார்க்காத படமாக இருக்கிறதே என்று கொஞ்சம் ஆர்வத்தோடு பார்த்த போது அது ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப்படமான bloodstone படத்தின் தமிழாக்கம் என்று தெரிந்தது. ஆங்கிலப்படம் என்றவுடன் தொழில் நுட்பம் என்று பார்த்தால் இன்றைய ஆங்கிலப்படங்களில் உள்ள நேர்த்தி தெரியவில்லை. சொல்லப்போனால் இன்றைய தமிழ்ப்படங்களின் அளவு கூட இல்லை.

தேனிலவுக்காக இந்தியா வரும் வெள்ளைக்கார இளஞ்சோடி சந்திக்கும் பிரச்சினைகள் தான் கதை, மன்னர் கால மாணிக்கக் கல் ஒன்று திருடுபோகிறது. போலீஸ் துரத்தியதால் கொள்ளையர்கள் அதை தேனிலவு ஜோடியின் பைக்குள் இட்டுவிடுகிறார்கள். பிறகு அதைக் கைப்பற்ற கதாநாயகி கடத்தப்பட்டு பேரம் பேசப்படுகிறது. அதற்குள் இந்திய டாக்சி டிரைவரான ரஜினியின் கையில் அந்த வைரம் கிடைக்கிறது. ரஜினி கதாநாயகனுக்கு உதவுகிறார்.ரஜினிக்கு சேரிக்கார வாலுகள் உதவி. சேசிங், பைட்டிங் மசாலாக்களுக்குப்பின் கதாநாயகியும் மாணிக்கமும் மீட்கப்பட்டு சுபம். வழக்கமான மசாலா மிக்சர். வெள்ளைக்கார முகங்களுக்கு நடுவே ரஜினியின் கறுப்பு முகம் என்ற வித்தியாசம் மட்டும். நடுநடுவே ரஜினி ஜாக்கிசான் பாணி கலாட்டாக்கள் செய்வது மட்டுமே ஆறுதல்.

BloodStone - directed by Dwight Little

Producer: Ashok AmirthaRaj, MuraliManohar

Cast: Rajnikant, Breet Stimely, Anna Nicholas

Music :ilayaraja

2006-08-31

ரஜினி சினிமா -புதிர் 1

rajini - hosted by http://tinypic.com


சூப்பர்ஸ்டார் நடித்த இந்தக் காட்சி இடம் பெற்ற படம் எது?

try it!

இந்தப் புதிருக்கு விடையும் விளக்கமும் இங்கே!

2006-08-28

தமிழ்மணம், தேன்கூடு

திரட்டிகளில் இப்போது மறுமொழி நிலவரம் சேவை தெரிய தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் வழங்கும் நிரல்களை வலைப்பதிவு டெம்ப்ளேட்டில் இணைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

தற்போது வேர்ட்பிரஸ் வலைப்பதிவு சேவையை பல தளங்கள் அளிக்கத் துவங்கியுள்ளன. வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருள் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. சிறப்பானதாகவும் உள்ளது. ஆனால் திரட்டிகளில் பதிவு/மறுமோழி நிலவரம் இடம் பெற இயலாததால் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

வேர்ட்பிரஸ் சேவைகள் அனைத்துமே Comments RSS என்னும் மறுமொழிக்கான ஓடையைக் கொண்டுள்ளன. எனவே திரட்டிகளில் மறுமொழி நிலவரம் தெரிய இந்த Comments RSS வசதியைக்கொண்டு மறுமொழி திரட்டும் வகையில் (Comments RSS ஓடைகளின் பேரோடையை உருவாக்கி!) நிரல் எழுதி திரட்டியில் வைத்தால் போதுமானது.

எந்த நிரலையும் பதிவர்கள் இணைக்காமலே மறுமொழி நிலவரத்தை இதன்மூலம் திரட்ட முடியும்.

திரட்டி சேவையாளர்கள் இதை மனதில் கொண்டு வேர்ட்பிரஸ் வலைப்பதிவர்களையும் மறுமொழி சேவை பெற உதவலாமே.

தொடர்புள்ள பதிவு

வேர்ட்பிரஸ் - பிளாக்கர்

2006-08-24

புதிய உமர் எழுத்துரு

தமிழ் கம்பியூட்டர் பத்திரிகையை நான் கம்பியூட்டர் வாங்குவதற்கு முன் (?) சந்தாகட்டி வாங்கிக் கொண்டிருந்தேன். சந்தா தீர்ந்த பிறகு புதுப்பிக்காமல் விட்டு விட்டேன். தமிழில் கம்பியூட்டர் பத்திரிகை நடத்தினாலும் இதழுக்கு இணைய தளமோ மின்னஞ்சல் முகவரியோ இல்லை. சந்தா கட்டுவதற்கும் புராதன வழிமுறைகள் தவிர வேறு வழியில்லை.

ஒருமுறை நண்பர் அழகி விஸ்வநாதன் தமிழ் கம்பியூட்டர் இதழுடன் பனாசியா நிறுவனத்தின் இலவச மென்பொருட்கள் அடங்கிய குறுவட்டு இணைத்து வழங்கப்பட்டிருப்பதாக மின்மடல் அனுப்பியிருந்தார். சரியான நேரத்தில் அவரது மடல் வந்ததால் தீர்ந்து போவதற்குள் இதழ் பிரதியை குறுவட்டுடன் வாங்க முடிந்தது.

அந்த குறுவட்டில் பல திறமூல மென்பொருட்களும் ஏராளமான தாம் (Tam) குறியேற்ற எழுத்துருக்களும் இருந்தன. கூடவே மென்பொருட்களின் சோர்ஸ்கோடும் (source code) மென்பொருட்களையும் எழுத்துருக்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றம் செய்யும் திறமூல உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.

ஒருங்குறி குழுமத்தில் புதிய யூனிகோடு எழுத்துரு உருவாக்குவது குறித்து பேசப்பட்டபோது பனாசியா எழுத்துருக்கள் பற்றி தெரிவித்தேன். கணிஞர் உமர்தம்பி அவர்கள் அவற்றை யூனிகோடாக மாற்றித்தருவதாக வாக்களித்தார். பிறகு சில நாட்கள் கழித்து பனாசியா எழுத்துரு ஒன்றை யூனிகோடு எழுத்துருவாக மாற்றம் செய்து சோதித்து பார்க்க அனுப்பியிருந்தார்.

ஆனால் அதன்பிறகு அவரைத்தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரது மரணச்செய்திதான் பிறகு அறிந்தது. அவர் கடைசியாக ஈடுபட்டிருந்த பணி இது. இதில் அவர் வேறு எழுத்துருக்களை செய்ததாக அறிய முடியவில்லை. ஆனால் அவர் கடைசியாக செய்த எழுத்துரு என்னிடம் இருக்கிறது. அதனை UmarUniTx என்ற பெயரில் வெளியிடுகிறேன்.

பின்வரும் சுட்டியில் எழுத்துருவை பதிவிறக்கம் செய்யலாம்.

UmarUniTx [font]


எழுத்துரு பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

2006-08-20

சிறந்த முதல்வர் யார்

ஒரு வாக்கெடுப்பு











சிறந்த முதல்வர்
தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் யார்?




















கருணாநிதி
ஜெயலலிதா
எம்ஜிஆர்
அண்ணாதுரை
காமராஜ்




view results








2006-07-14

கணித்தமிழ்த்தேனீ உமர்தம்பி!

உமருக்கு அஞ்சலி பதிவுகள்:

விரிவான என் பதிவு:
கணித்தமிழர் உமர்தம்பி -வலைஞன்


உமர் தொடர்பான பிறபதிவுகள்:

யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -முஃப்தி

உமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர் -காசி

தேனி உமருக்கு அஞ்சலி -மதிகந்தசாமி

உமர் தம்பி -வாசன்

யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -அதிரைக்காரன்

'THEENE.eot' உமர் மறைவு -தேசிகன்

திரு. உமர் மரணம் -க்ருபா

யுனிகோட் உமர் தம்பி மரணம் -அபூ முஹை

நண்பர் உமர் மறைவு -வெங்கட்

அஞ்சலி தேனி உமர் -பரி

அஞ்சலி தேனி உமர் -டுபுக்கு

உமர் தம்பி மறைவு -முகுந்த்

Deep Condolences -பிரகாஷ்

'தேனீ' உமர் மறைவு - கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.-ஆசாத்

உமர் -சுரேஷ்

e-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -மா.சிவகுமார்

உமருக்கு அஞ்சலி -மணியன்

தமிழ் வலையுலகின் இழப்பு 'தேனீ உமர் தம்பி' -இறை நேசன்

Tiru. Umarthambi - sad news -ஒருங்குறி வலைக்குழுமம்

Tiru. Umarthambi - sad news -தமிழ்மணம் வலைக்குழுமம்

'யூனிகோட்' உமர்தம்பி மரணமடைந்தார்கள் -அதிரை இணையம்

2006-06-18

சினிமா புதிர் - 2

நிறம் என்றொரு மலையாளப்படம். கமல் என்ற இயக்குநர் இயக்கிய இப்படத்தில் குஞ்சாக்கோ கோபனும் ஷாலினியும் நடித்திருந்தனர். இதில் ஒரு காட்சி.

இளம் பாடகன் ஒருவன் கல்லூரியில் பாடுகிறான். குறும்புக்காரர்களான நாயகனும் நாயகியும் நண்பர்களும் விசிலடித்து கலாட்டா செய்கிறார்கள். பாடகனும் விடாது பாடுகிறான். ஒருகட்டத்தில் அவன் கையிலிருந்து பாடல் காகிதம் பறந்து நாயகியின் கையில் வந்து சேருகிறது. பாடகன் தடுமாற நாயகி தொடர்கிறாள். பாடகன் அவளை மேடைக்கு அழைக்கிறான். நாயகனும் நண்பர்களுமாக அவளை மேடையேற்ற பாடல் தொடர்கிறது. கீழிருந்தே நாயகனும் நண்பர்களும் கூட ஆடுகிறார்கள்.

தமிழில் இந்தப்படம் அதே இயக்குநரால் பிரியாத வரம் வேண்டும் என்ற பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. பிரசாந்த் ஷாலினி நடித்தார்கள். தமிழில் நாயகனும் மேடையேறி சிலவரிகள் பாடுவான். (இல்லாவிட்டால் நாயக இமேஜ் என்னாவது?)

மலையாளத்தில் அந்தப்பாடல்

ப்ராயம் நம்மில் மோகம் நல்கி
மோகம் கண்ணில் ராகம் நல்கி
ராகம் சுண்டில் கானம் நல்கி
கானம் மூளான் ராகம் நல்கி
ஈணம் தேடும் ஈறத்தண்டில்
காற்றின் கைகள் தாளம் தட்டி
தாளக் கொம்பத் தூஞ்ஞால் ஆடி
பாடூ... நாட்டு மயிலே
கூடே ஆடூ... சோல மயிலே...

தமிழ்ப்படத்தில் இதே சூழ்நிலைக்கு வரும் பாடல்

டிக்கிடிக்கி லோனா ஆடலாமா
திலக்கிலி கானா பாடலாமா
திக்கிதிக்கி லவ்வ சொல்லலாமா
டீனேஜ் பொண்ணை வெல்லலாமா

எல்கேஜி பையன் பிஎஸ்ஸி பொண்ணை
லுக்கொண்ணு விடற காலமிது
பொண்ணோட மனசை ஆராய்ச்சி பண்ண
கம்பியூட்டர் கேட்கும் காலமிது
பிஸ்கட் வெண்ணிலா .................................
....................................மடிசாரு
நம்ம மாமி பொண்ணுக்கு சுடிதாரு...

(கோடிட்ட இடத்தை நிரப்பவும். எத்தனை முறை கேட்டும் எனக்குப் புரியவில்லை.)

*
சமீபத்தில் மலையாள நடிகை ஒருவரின் பேட்டி ஏசியாநெட் சானலில் பார்த்த போது அவருக்கு தமிழ்ப்படல்கள் தான் பிடிக்கும் என்றார். காரணம் தமிழில் உள்ள ஏராளமான அழகான சொல்வளமும் பாடல்களில் அவை பயன்படுத்தப்படும் விதமும் என்றார். உதாரணத்துக்கு அவர் கூறியவற்றுள் கண்ணதாசன் பாடல்களும் உண்மையிலேயே அழகான புதிய (தூய)தமிழ்ப்பாடல்களும் இருந்தன.

இப்படி பிறமொழிக்காரர்களால் சொல்வளம் மிக்க மொழி என்று பாராட்டப்படும் தமிழ் மொழியில், தூய மலையாளத்தில் இருந்த ஒரு பாடல் வரிக்குவரி ஆங்கிலம் கலந்து எழுதப்பட்டதற்கு யார் காரணம்? நிச்சயம் இயக்குநராக இருக்க முடியாது. இதைவிட அந்த மலையாளப்பாட்டையே மொழி பெயர்த்திருக்கலாம்.

குறைந்த சொற்களைக்கொண்டு அவர்களால் அழகாக எழுத முடிகிறது. நிறைய சொற்கள் உள்ள மொழியில் ஆங்கிலம் கலக்காமல் எழுத முடியவில்லை. டிக்கிலோனா என்னமொழியோ? இப்படித் தமிழ்க் கொலை செய்ததற்கு கவிஞருக்கு என்ன நியாயம் இருக்குமோ?.

மலையாளப்பாடல்..

தமிழ்ப்பாடல்(mp3)..

புதிர்: கோடிட்ட இடத்தை நிரப்பவும்.
விடை: எனக்கே தெரியாது.

2006-06-13

சினிமா புதிர் - 1

அன்னக்கிளி நீ வாடி....ஜெஸ்ஸி கிப்ட் என்ற பாடகர் இசையமைப்பாளர் அறிமுகமாகி பிரபலமான திரைப்படம் 4 the people என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி 4 students என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது. நான்கு மாணவர்கள் சேர்ந்து 4 the people இணையதளம் நடத்தி பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்று அன்னியன் பாணியில் (அன்னியனுக்கு முன்பே வெளியானது!) சமூக விரோதிகளை தண்டிக்கும் கதை கொண்ட இப்படத்தில் மாணவர்களைப் பிடிக்க வரும் ராஜன் மேத்யூ ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சுனில் என்ற புதுமுக நடிகர்.

புதிர் என்னவென்றால் இந்த சுனில் சமீபத்திய நேரடி தமிழ்ப்படமொன்றில் வேறொரு பெயரில் கதாநாயகனாக அறிமுகமானார். படத்தின் பெயர் என்ன? நாயகன் யார்?

2006-05-20

கலைஞருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கலைஞருக்கு

வணக்கம். தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். பதவியேற்ற சூட்டோடு வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைகிறீர்கள். நல்லது.

ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் நீங்களும் உங்கள் கட்சியினரும் சந்தித்த இன்னல்கள் ஏராளம். வயதில் முதியவர் என்று பாராமல் உங்களை நள்ளிரவில் கைது செய்தார்கள். உங்கள் அன்புக்குரிய மாறனை குண்டுக்கட்டாகத் தூக்கி எறிந்தனர்.

உங்கள் அமைச்சரவையில் இருந்தவர்கள் மீதெல்லாம் பலவகை வழக்குகள் போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார்கள். உங்கள் மகன் ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து விலக வைத்தார்கள்.

எத்தனை சிரமங்கள்? அத்தனைக்கும் இன்று முடிவு வந்து விட்டது.

எல்லோரும் வியக்கும் வண்ணம் ஏழுகட்சி கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று சொல்லி சாதித்துக் காட்டினீர்கள். அந்த நன்றிக்கடனை சோனியாவிடமிருந்து மத்திய அமைச்சர்கள் வடிவில் வசூலித்து விட்டீர்கள்.

இப்போது உங்கள் முறை. நீங்கள் முதல்வராக காங்கிரஸ் உங்களுக்குத் தோள் கொடுத்தது. நீங்களோ முகட்டில் ஏறிக்கொண்டு படிக்கட்டுகளை பந்தாடத் தொடங்கிவிட்டீர்கள்.

அவசர அவசரமாக அமைச்சரவையை முடிவு செய்து யாரும் பங்கு கேட்டுவிடாதபடி பெரியதொரு மந்திரிசபையை அமைத்து விட்டீர்கள்.

அன்று கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று சொன்னதற்காக இளங்கோவனைப் பந்தாடினீர்கள். அவரோ இன்றும் அந்த அடியின் வலியில் பேதலித்துக் கிடக்கிறார். உங்களிடம் பங்கு கேட்பதற்கு வேறு யாருக்குத் துணிவிருக்கிறது? ஆனால் மக்களை நீங்கள் மறந்து விட்டீர்கள். அன்று உங்களிடம் கணக்குக் கேட்ட எம்ஜிஆரைத் துரத்தினீர்கள். மக்கள் உங்களை எம்ஜிஆர் உள்ளவரை ஆட்சியிலிருந்து அகற்றி வைத்தார்கள்.

இன்று ஜெயலலிதாவின் அகங்காரத்துக்கு பேரிடியைத் தந்த அதே மக்கள் உங்களுக்கும் ஒரு பாடமாகத்தான் தனிப் பெரும்பான்மையை மறுத்தார்கள். அதை ஏற்க மறுத்து மீண்டும் உங்கள் தவறுகளை அரங்கேற்றத் துணிந்து விட்டீர்கள்.

நீங்கள் மாறவேயில்லை. உங்கள் குடும்ப ஆட்சியை நிறுவப் பார்க்கிறீர்கள் என்ற வைகோவை தூக்கி எறிந்தீர்கள். அவரோ சகதியிலிருந்து எழுந்து சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்.

உங்கள் கட்சி தவிர வேறொருகட்சி வளர்ந்து விடக்கூடாது. தேர்தலில் மட்டும் உங்களுக்கு அவர்கள் தயவு வேண்டும். தேர்தல் முடிந்தபின் அவர்கள் உங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் நீங்கள் தூக்கிப்போடும் எச்சில் இலைகளை மட்டுமே அவர்கள் ஏந்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இதில் மட்டும் என்னே ஒற்றுமை.

மத்தியில் முதன்முறை உறுப்பினரான ஒருவரை நெறிகளை மீறி காபினட் அமைச்சராக்கவும், விரும்பிய இலாகாவை பிடிவாதம் பிடித்துப் பெறுவதிலும் உங்களுக்கு வெட்கமேயில்லை. அளவுக்கு மீறி அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொள்வதிலும் நீங்கள் நாணப்படவில்லை. பாவம் உங்களை நம்பிய அவர்கள் தான் இப்போது ஏமாந்து நிற்கிறார்கள். பூட்டிய வீட்டுக்குள் நீங்களும் உங்கள் பரிவாரங்களும் பரிகசிப்பது கேட்கிறது.

கூட்டணி ஆட்சியில் பிரதமர் பதவியைக் கூட வேண்டாம் என்றவர்கள் எம் 'தோழர்கள்'. அவர்கள் இப்போதும் உங்களைப் பின்தாங்கி நிற்பதில் வியப்பேதுமில்லை.

பாமகவின் கணக்கே வேறு. அதனால் அவர்களும் இப்போதைக்கு சுணங்க மாட்டார்கள்.

சுதந்திரத்துக்கு முந்திய 'தியாகி'களின் கட்சியல்ல இப்போது காங்கிரஸ். அன்று உங்களிடம் ஆட்சியைப் பறிகொடுத்த அதே காங்கிரஸ் இன்று நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிப் பங்கை எதிர்பார்க்கிறது. வாங்கித்தான் பழக்கமுண்டு கொடுத்துப் பழக்கமில்லை என்பதுதான் உங்கள் கொள்கையா?

(கொள்ளைக்காரர்கள் தான் கொள்ளையில் பங்கு கொடுக்க மறுப்பவர்கள். ஆட்சிபீடமே கொள்ளைக் கூட்டமென்கிறீர்களா? அப்படியானால் இன்னொரு கூட்டத்துக்கு கொள்ளையில் பங்கு கொடுத்தால் உங்கள் பங்கு குறைந்து விடுமென்பது நியாயம்தான்.)

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது தான் மக்கள் தந்த தீர்ப்பு. ஏற்பதில் உங்களுக்கு ஏனிந்தத் தயக்கம். அறிவுள்ளவர் தாங்கள். அதை அழிவை நோக்கிப் பயன்படுத்தாதிருங்கள்.

குடும்பப் பாசத்தால் கட்சியையும் கட்சிப்பாசத்தால் ஆட்சியையும் கட்டுப்பாட்டில் வைக்கப் பார்க்கிறீர்கள். மற்றவர்கள் வளர்வதை அனுமதிக்க மறுக்கிறீர்கள். மக்கள் பங்கிட்டுத் தந்ததை பங்கிடாமல் வைத்துக் கொண்டீர்கள்.

அன்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவளிப்பதாகத்தான் நீங்கள் சொன்னீர்கள். சோனியாவின் அழைப்புக்குப் பின்னரே அமைச்சரவையில் சேர ஒப்புக்கொண்டீர்கள். (அல்லது அப்படிக் காட்டிக் கொண்டீர்கள்) இப்போது அதே முறையில் உங்கள் அழைப்பை எதிர்பார்க்கிறது காங்கிரஸ். ஆனால் நீங்களோ கமுக்கமாக கவிழ்த்து விட்டீர்கள்.

கூட்டணிக் கட்சியோடு மோதல் வேண்டாமென்று காங்கிரஸ் தலைமை மவுனித்து விட்டது. தலைமையின் கட்டளையால் தமிழகத் தலைவர்களும் அடக்கியே வாசிக்கிறார்கள். குமுறிக் கொண்டிருப்பவர்கள் தொண்டர்கள் தான். அவர்களை விடுங்கள் இரண்டு பேருக்குமேல் தமிழகத் தெருக்களில் கூடிப்பேசும் பொதுசனம் பேசிக்கொள்வதே இதுதான்.

ராசதந்திரமென்று நீங்கள் நினைக்கலாம். சனநாயகத் துரோகமென்கிறது சனம். இப்போதைக்கு நீங்கள் மறுக்கலாம். எப்போதுமே மறைத்துவிட முடியுமா?

நீங்கள் உங்கள் கூட்டணி நண்பர்களை ஏமாற்றி விட்டதற்காக இறுமாப்புக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் அவமானப்படுத்தியது உங்களுக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளனையும் தான்.
அவர்களுக்கு என்ன இலவசங்களை ஈந்து விட்டால் இசைந்து போவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்கள் புதிரானவர்கள். உரிய காலத்தில் புரிய வைப்பார்கள்.

அன்புடன்
உங்கள் அணிக்கே வாக்களித்த
பாவம் வாக்காளன்.













96
34
18
9
6












61
6
2











1









சுயேட்சை
1

கொடி படங்கள் : நன்றி : இட்லிவடை

2006-05-10

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள் இன்று பல ஊடகங்கள் வழி நமக்கு உடனுக்குடன் தெரிய வருகிறது. ஆனாலும் இணையத்தில் யூனிகோடில் ஒரு செய்தித்தளம் இல்லாதது பெருங்குறையாகவே இருந்து வருகிறது. அக்குறையை இன்று நம் வலைப்பதிவர்கள் தான் தீர்த்து வைக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் நாள் செய்திகளை இட்லி வடை வலைப்பதிவில் மிகச் சிறப்பாக காண முடிந்தது. தேர்தல் முடிவுகளையும் அவர் சிறப்பாகத் தருவார். நண்பர் முத்துவும் தேர்தல் முடிவுகளை சுடச்சுடத் தருவதாகக் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுக்கான தமிழ் இணைய தளத்தை யூனிகோடிலேயே அமைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

இந்நிலையில் எனது இப்பதிவை சிறப்பு தேர்தல் திரட்டியாக தேர்தல் முடிவுகளுக்கான இணைப்புத்தளமாக அமைத்திருக்கிறேன்.

இப்பதிவில் உள்ள நிறைகுறைகளை அறியத்தாருங்கள். வேறு ஏதேனும் இணைக்ககூடிய தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால் மறுமொழியில் சுட்டி தாருங்கள்.
















தமிழக தேர்தல் முடிவுகள்

சிறப்பு தேர்தல் திரட்டி

தமிழ்மணம்தேன்கூடு
Thamizmanam.com










2006-05-09

தேர்தல்பிற செய்திகள்

9 மே 2006

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 70.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களை வெளியிட்டார். அதிக பட்சமாக கருர் மாவட்டத்தில் 77.5 சதவீதமும் குறைந்த பட்சமாக சென்னையில் 58.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. சில தொகுதிகளில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சில குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் 85 சதவீதத்துக்குமேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இவ்வாறு அசாதாரண வாக்குப்பதிவு உள்ள பகுதிகளில் கள்ள ஓட்ட போடப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. ஆவணங்களின் அடிப்படையில் அவ்வாறு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிய வந்துள்ளது.

ஆயினும் இயந்திரக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தில் 10 தொகுதிகளைச் சேர்ந்த 18 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

வியாழக்கிழமை 234 தொகுதிகளுக்கான வாக்குகள் மொத்தம் 82 மையங்களில் எண்ணப்படுகிறது.

திண்டிவனம் தொகுதியில் ஏற்பட்ட தேர்தல் கலவரத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். அதிமுக வேட்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகிறது.

தூத்துக்குடியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஆயிரக்கணக்கான குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

2006-05-08

தேர்தல்கள செய்திகள்

மேலும் சில செய்திகள்

ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் தாக்கப்பட்டதாக சன் டிவியும் ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் வாக்குப்பதிவு மையத்தில் புகுந்து கலாட்டா செய்ததாக ஜெயா டிவியும் சொல்லிக் கொண்டிருக்க கண் தெரியாத ஒருவருக்கு இரட்டை இலை சின்னத்தை காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக வேட்பாளர் சீமான் அதிமுகவினரால் தாக்கப்பட்டார் என்று பொதிகை தெரிவித்தது.

தமிழகத்தில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார். துல்லியமான விபரம் நாளை காலைதான் வெளியிட முடியும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரச்சாரத்தில் 80 வாகனங்களைப் பயன்படுத்திய ஜெயலலிதாவும் 34 வாகனங்களுடன் சென்ற தயாநிதி மாறனும் இவ்வாறு கண்டிக்கப்பட்டனர்.

எக்சிட் போல் எனப்படும் வாக்குப்பதிவிற்கு பிந்திய கருத்துக்கணிப்புகள் திமுக அணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அதிமுக தொண்டர்களும் தங்களின் தோல்வியை எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். திமுக அணி இறுதிக் கட்ட கருத்துக் கணிப்புகளும், எக்சிட்போல் முடிவுகளும் சாதகமாக இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

2006-05-07

தேர்தல்நாள் செய்திகள்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலையிலேயே காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பணம்கொடுக்க முயன்றதாக அதிமுகவினர் மீது திமுகவினரும், திமுகவினர் மீது அதிமுகவினரும் ஆங்காங்கே குற்றச்சாட்டு பதிவு செய்து வருகின்றனர்.

இரண்டு செய்திகள்

1.சன் செய்திகள்

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிமுகவினரால் தாக்கப்பட்டார். அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து தாக்குதல்.

2. ஜெயா செய்திகள்

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வாக்காளர்களுக்கு பணம்கொடுக்க முயன்றபோது சுற்றி வளைப்பு. பெட்டி பெட்டியாக பணத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

updates below (Comments section)

2006-05-04

சுய உதவிக்குழுக்களை உருவாக்கியவர் ஜெயலலிதாவா?

இன்று தேர்தல் பிரச்சாரக்களத்தில் சுய உதவிக்குழுக்களின் வாக்குகள் ஜெயலலிதாவுக்கே கிடைக்கும் என்பதாக பேசப்படுகிறது. அதற்குக் காரணமாகக் கூறப்படுவது ஜெயலலிதா தான் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி மகளிர் பொருளாதார தன்னிறைவு பெற வழிகாட்டினார் என்பதாகும்.

சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த நடிகரும் இயக்குநருமான விசு தன் ஜெயா டிவி பேட்டியில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டது இந்த விஷயம்தான். கிராமங்கள் தோறும் மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை உருவாக்கியதற்காக பெண்கள் அவரைப் போற்றுகின்றனர் என்பது அவரது கருத்து.

இது உண்மையா?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டனவா?

தமிழகத்தில் மட்டுமே சுய உதவிக்குழுக்கள் உள்ளனவா?

இது ஜெயலலிதாவின் மூளையில் உதித்த மகத்தான திட்டம் என்பது உண்மையா?

வலைப்பதிவர்களின் கருத்தறிய விரும்புகிறேன். குறிப்பாக வங்கிப்பணி தொடர்புடைய தமிழினி முத்து மற்றும் டிபிஆர்ஜோசப் அவர்கள் ஆகியோர் இதுபற்றி கூடுதல் தகவல் தரமுடியும்.

2006-04-03

பாட்டுக் கேட்க வா...

இன்றைய பாடல் கானா உலகநாதனின்

வாழமீனுக்கும்....

....கல்யாணாமாம் கல்யாணம்....


சித்திரம் பேசுதடி திரைப்படப்பாடல்.

2006-03-05

தமிழ் எழுத்துச்சீர்மை

மனித வாழ்வின் ஆதார தொடர்பு இயக்கம் மொழி. சைகைகள், ஓசைகளிலிருந்து சொற்கள், சொற்றொடர்கள், உரையாடல், இசைப்பாடல், கதை என ஒலிக்குறிப்பு வளர்ச்சி கண்டபோது எழுத்து என்னும் நிலையான வடிவம் தேவைப்பட்டது. அதனடிப்படையில் வாழ்விடம், சூழல், இயற்கை அமைப்பிற்கேற்ப மொழிகள் உருவாகின.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடியாகக் கருதப்படும் தமிழ், மொழிகளுள் பழமையும் தொன்மையும் மிக்கது. மொழிகளும் கால மாற்றத்திற்கேற்ப மாறுதல்களை உடையது என்பதால் தமிழும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன் இன்றைய வடிவத்தைக் கண்டுள்ளது. இறுதியாக மாறுதல் கண்டது 'ஆ'கார மற்றும் 'ஐ' கார உயிர்மெய் வடிவங்களில் தமிழக அரசினால் 1978ம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றமாகும்.

இதே காலகட்டத்தில் உகர ஊகார உயிர்மெய்க் குறியீடுகளை மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டபோதிலும் பரிந்துரை செய்யப்பட்ட புதிய குறியீடுகள் வேற்று மொழி போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்ததாலும் ஒத்த கருத்தினை எட்ட முடியாமலும் இம்முயற்சி தடைப்பட்டது.

என்றாலும் மொழி ஆர்வலர்கள் பலரும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு தொடர்ந்து உகர ஊகார குறியீடுகளை உருவாக்கி சோதித்து வருகிறார்கள். இந்த முயற்சிகள் பற்றிய பல கட்டுரைகள் தந்த ஊக்கத்தினால் நானும் சிலகாலம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.

எளிமையான குறியீட்டு வடிவங்கள் பலவற்றை நம் அறிஞர்கள் பலரும் ஆக்கித் தந்துள்ள போதிலும் அவற்றின் வடிவம் தமிழுக்கு அன்னியமாகத் தோற்றமளிப்பதே அவை வரவேற்புப் பெறாததற்குக் காரணம். எனவே தமிழ் எழுத்து வடிவங்களுக்கு மாறுபடாத வகையில் ஒரு வடிவை உருவாக்க முனைந்தேன்.

இறுதியாக நான் கண்டடைந்த வரிவடிவம் பின்வருமாறு. எகர, ஏகாரக் குறியீடுகளை இடவலமாகத் திருப்பி இடுவதின் மூலம் உகர ஊகாரக் குறியீடுகளைப் பெறலாம். இதன் மூலம் வாசிக்கும் போது வேற்று மொழி போல அதிக வேறுபாடு தோன்றாமல் குறியீடுகளைப் பெறலாம். எகர ஏகாரக் குறிகள் ஏற்கனவே ஒகர ஓகார வரிசைக்கும் பயன்படுத்தப் படுவதால் இது மிக வசதியான மாற்றாக விளங்கும்.

இதில் உகரக்குறியீட்டை மட்டும் வசதிக்கேற்ப தேவைப்பட்டால் சற்று குறுக்கிக் கொள்ளலாம். இதற்கான மாதிரி வரிவடிவங்கள் பின்வருவன:


Image hosting by TinyPic

இவ்வரிவடிவங்களைச் சற்று உற்று நோக்கினால் கிரந்த எழுத்துக்களில் பயன்படுத்தப்படும் உகர ஊகாரக்குறியீடுகள் ு ூ இதே அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பது புலப்படும்


Image hosting by TinyPic
கிரந்த எழுத்துக் குறியீடுகளையே தமிழுக்கும் பயன்படுத்தலாம் என்று சில தமிழறிஞர்கள் கருத்துக் கூறியதுண்டு. ஆனால் அதற்கான அவசியமே இன்றி இக்குறியீடுகள் தமிழ் எழுத்துக் குறியீடுகளிலிருந்தே தோன்றியவை என்பது மேற்கண்ட அமைப்பிலிருந்து விளங்கும். எனவே தமிழுக்கு அன்னியமாகத் தோன்றாத அதே சமயம் கிரந்தக் குறியீடுகளை ஒத்த சரியான குறியீடாக இதனை நான் தேர்ந்துள்ளேன்.

Image hosting by TinyPic
'உ'கரத்திற்கு இக்குறியீட்டை சற்று குறுக்கிக் கொள்வதால் அதனை மீண்டும் பயன்படுத்த ஏதுவாக உள்ளது. 'ஊ'கார உயிரெழுத்து, 'ஔ'கார உயிரெழுத்து போன்றவற்றிலும் மாற்றங்கள் வேண்டின் இக்குறியீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் 'ஔ'கார உயிர்மெய்களும் மேற்கணடவாறு மாற்றம் பெறும்.

இகரத்தில் சிலர் செய்வது போல டி எழுத்து மாற்றம் தேவையில்லை என்பது என் கருத்து. இப்போது 'உ'கர 'ஊ'கார உயிர்மெய் தொட்டெழுத்துக்களாக இருந்தாலும் சீர்மைக்குப்பின் 'ஆ'கார, 'எ'கர, 'ஏ'கார எழுத்துக்களைப்போன்று 'உ'கர 'ஊ'கார வரிசை முழுமையும் தொடா எழுத்துக்களாக மாறுவதால் அதிக வேறுபாடு தோன்றாது. 'இ'கர, 'ஈ'கார உயிர்மெய்கள் அனைத்தும் இப்போது தொட்டெழுத்துக்களாக உள்ளன. டி, டீ மட்டும் சீர்மைப் படுத்துவதால் தொடாமல் தனித்துத் தெரியும்.

மேற்கண்ட வடிவமைப்பின் முக்கிய நோக்கமே தமிழின் சீர்திருத்தம் தமிழுக்கு இயைந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான். எத்தனை எழுத்துரு வடிவங்கள் ஆக்கப்பட்டாலும் அவை பயன்பாட்டுக்கு வருவது முக்கியம். அதற்கு அரசின் அங்கீகாரம் அதனினும் முக்கியம்.

1978ல் அமலாக்கப்பட்ட எழுத்துச் சீர்மைகள் இன்று தமிழுக்கு மிகப்பலமாக இருக்கின்றன. அதுபோல அரசு இந்தப் புதிய எழுத்துச் சீர்மையையும் ஏற்று அமல்படுத்துமானால் தமிழ் கற்பவர்களுக்கும் கணினிவழிப் பயன்பாடுகளுக்கும் இன்னும் எளிமையாக இனிமையானதாக இருக்கும்.

2006-02-23

சிறைமீட்பு

வாகன விபத்து வழக்கில் சிக்கி கடந்த ஒன்றரை வருடமாக சவுதி அரேபியாவின் ரியாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழரான திரு அகஸ்டின் துரைசாமி நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரே முதல் நீதிபதிகள் என்ற அடிப்படையில் அவர்களின் மன்னிப்பை அடுத்து அவர் விடுதலை பெற்றிருப்பதாகத் தெரிகிறது. மற்ற விவரங்கள் தெரியவந்தபின் எழுதுகிறேன்.

இது குறித்து நான் முன்பு எழுதிய பதிவுகள்:

http://akaravalai.blogspot.com/2005/03/blog-post_12.html

http://akaravalai.blogspot.com/2005/08/blog-post_15.html

சங்கமம் வலைப்பதிவில் சுவனப்பிரியன் எழுதியது:

http://suvanappiriyan.blogspot.com/2006/02/blog-post_11.html

2006-02-17

தலைப்புச் செய்தி

என்ன புதுசா இருக்கப்போகுது அப்படின்னு நெனைக்காம அப்படியே ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துட்டீங்கன்னா பிரயோசனாமாயிருக்கும். (அட உங்களுக்குத் தானுங்க!)

அழகி- இப்போது இலவசம்

2006-02-15

தமிழ்மென்பொருள்

தமிழ்மென்பொருள் சிலவற்றைப்பற்றி அறிய...

வருக!
தமிழ் மென்பொருள்கள்

புதுசு புத்தம்பதுசு

எல்லோரும் வருகை தந்து வாழ்...
சாரி வாசித்தருள அன்புடன்...

*
[ http://valai.blogspirit.com/ ]
*

2006-01-05

வாழ்த்து

புத்தாண்டின் பொலிவிற்காய்
பூச்சொரிந்த வாழ்த்துக்கள்!

இயற்கையும் இவ்வாண்டில்
கூடாமல் குறையாமல் வளம் பொழிக

கொலைவாளினை கைவிட்டே
கயவரும்காத்திடுக பூமியின் புதல்வர்களை.

நம்கடமை நாம்செய்ய அவரவர் அவர்தம் கடமையாற்றி
அகிலத்தை அமைதியாக்கி, ஆற்றலூட்டுக!