2006-05-08

தேர்தல்கள செய்திகள்

மேலும் சில செய்திகள்

ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் தாக்கப்பட்டதாக சன் டிவியும் ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் வாக்குப்பதிவு மையத்தில் புகுந்து கலாட்டா செய்ததாக ஜெயா டிவியும் சொல்லிக் கொண்டிருக்க கண் தெரியாத ஒருவருக்கு இரட்டை இலை சின்னத்தை காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக வேட்பாளர் சீமான் அதிமுகவினரால் தாக்கப்பட்டார் என்று பொதிகை தெரிவித்தது.

தமிழகத்தில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார். துல்லியமான விபரம் நாளை காலைதான் வெளியிட முடியும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரச்சாரத்தில் 80 வாகனங்களைப் பயன்படுத்திய ஜெயலலிதாவும் 34 வாகனங்களுடன் சென்ற தயாநிதி மாறனும் இவ்வாறு கண்டிக்கப்பட்டனர்.

எக்சிட் போல் எனப்படும் வாக்குப்பதிவிற்கு பிந்திய கருத்துக்கணிப்புகள் திமுக அணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அதிமுக தொண்டர்களும் தங்களின் தோல்வியை எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். திமுக அணி இறுதிக் கட்ட கருத்துக் கணிப்புகளும், எக்சிட்போல் முடிவுகளும் சாதகமாக இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

2 comments:

சின்ன பிள்ளை said...

தேர்தல் செய்திகள் வெளியிடுறதில் அகரவலையும்,
இட்லி வடையும்தான் முன்னிலை வகிக்கிறீங்க.
இட்லி வடை ஒரு நாள் லீவ் போட்டுட்டு எங்கோ
கிளம்பிட்டார். நீங்களும் எங்களை விட்டுட்டு எங்கும்
போயிடாதீங்கய்யா.

newsintamil said...

என்ன செய்வது இன்னும் இரண்டு நாளைக்கு எதிர்பார்ப்போட இருக்க வேண்டியதுதான்.

தேர்தல் சம்பந்தப்பட்ட முக்கிய செய்திகள் எல்லாம் இனி வியாழக்கிழமை தானே வெளிவரும்.

எங்க ஊர்ல இன்னும் அகன்ற அலைவரிசை இல்லை. அதனால் டயல் அப்ல அடிக்கடி அப்டேட் செய்வது கஷ்டம்தான். இப்போதைக்கு முக்கிய செய்திகள் இருந்தால் நிச்சயம் தருவேன்.