2006-05-10

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள் இன்று பல ஊடகங்கள் வழி நமக்கு உடனுக்குடன் தெரிய வருகிறது. ஆனாலும் இணையத்தில் யூனிகோடில் ஒரு செய்தித்தளம் இல்லாதது பெருங்குறையாகவே இருந்து வருகிறது. அக்குறையை இன்று நம் வலைப்பதிவர்கள் தான் தீர்த்து வைக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் நாள் செய்திகளை இட்லி வடை வலைப்பதிவில் மிகச் சிறப்பாக காண முடிந்தது. தேர்தல் முடிவுகளையும் அவர் சிறப்பாகத் தருவார். நண்பர் முத்துவும் தேர்தல் முடிவுகளை சுடச்சுடத் தருவதாகக் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுக்கான தமிழ் இணைய தளத்தை யூனிகோடிலேயே அமைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

இந்நிலையில் எனது இப்பதிவை சிறப்பு தேர்தல் திரட்டியாக தேர்தல் முடிவுகளுக்கான இணைப்புத்தளமாக அமைத்திருக்கிறேன்.

இப்பதிவில் உள்ள நிறைகுறைகளை அறியத்தாருங்கள். வேறு ஏதேனும் இணைக்ககூடிய தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால் மறுமொழியில் சுட்டி தாருங்கள்.
















தமிழக தேர்தல் முடிவுகள்

சிறப்பு தேர்தல் திரட்டி

தமிழ்மணம்தேன்கூடு
Thamizmanam.com










7 comments:

வலைஞன் said...

தமிழகத்தில் காலை 10 மணி நிலவரப்படி

திமுக 82,
காங்கிரஸ் 25,
பாமக 18,
மார்க்சிஸ்ட் 9,
இந்திய கம்யூனிஸ்ட் 5,
அதிமுக 64,
மதிமுக 4,
விடுதலைச்சிறுத்தைகள் 3,
தேமுதிக 1,
பாஜக 3,
சுயேட்சைகள் 3

முன்னணியில் உள்ளனர்.

இதே நிலை தொடர்ந்தால் திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி* அமைவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

ஜெயா டிவி தொடர்ந்து அதிமுக முன்னணியில் இருப்பதாக செய்தி காட்டிக்கொண்டிருக்கிறது.

Sivabalan said...

மிக்க நன்றி!

வலைஞன் said...

மன்னிக்கவும் இட்லிவடை பதிவுக்கான சுட்டி சரியாக இருக்கவில்லை. இப்போது சீர்செய்யப்பட்டுள்ளது.

வலைஞன் said...

Update:

காலை 11 மணி நிலவரம்

திமுக 80,
காங்கிரஸ் 27,
பாமக 19,
மார்க்சிஸ்ட் 8,
இந்திய கம்யூனிஸ்ட் 5,
அதிமுக 68,
மதிமுக 5,
விடுதலைச்சிறுத்தைகள் 3,
தேமுதிக 1,
பாஜக 4,
சுயேட்சைகள் 3

முன்னிலையில் உள்ளனர்.

சில தொகுதிகளில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவந்துவிட்டன. திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தோல்வியடைந்துள்ளார். மதிமுக தலைவர்களில் ஒருவரான மலர்மன்னன் திருச்சியில் தோல்விகண்டார்.

தமிழகத்தில் முன்னணி நிலவரப்படி பாஜக அதிக ஆதாயம் பெறும் கட்சியாக தோற்றமளிக்கிறது.

மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் இடதுசாரி முன்னணி வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது..

வலைஞன் said...

Update:

பகல் 1 மணி முன்னணி நிலவரம்

திமுக 92,
காங்கிரஸ் 34,
பாமக 18,
மார்க்சிஸ்ட் 7,
இந்திய கம்யூனிஸ்ட் 6,
அதிமுக 65,
மதிமுக 7,
விடுதலைச்சிறுத்தைகள் 1,
தேமுதிக 1,

இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 103 தொகுதிகளில் திமுக அணி 82 தொகுதிகளிலும் அதிமுக அணி 20 தொகுதிகளிலும் வென்றுள்ளன. அதில்
திமுக 52,
காங்கிரஸ் 13,
பாமக 7,
மார்க்சிஸ்ட் 5,
இந்திய கம்யூனிஸ்ட் 5,
அதிமுக 18,
மதிமுக 2,
தேமுதிக 1,

பாஜக முன்னணி நிலவரங்கள் மாறிவிட்டன. எனினும் பல தொகுதிகளில் ஓரளவு வாக்குகளை கைப்பற்றி உள்ளதாகத் தெரிகிறது. முதல் முறையாகப் போட்டியிடும் தேதிமுக தலைவர் விஜயகாந்த் பாமக கோட்டையான விருத்தாசலத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார். அவரது கட்சி எவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதைப் பொறுத்து அவரது அரசியல் எதிர்காலம் அமையும். கார்த்திக்கின் பாபி அதன் தேர்தல்கால பரபரப்பின் அடிப்படையில் என்ன நிலையில் உள்ளது என்பதும் தெரிய வேண்டியுள்ளது.

பாமகவும் இடது சாரிகளும் ஆட்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. திமுகவும் காங்கிரசும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் எனத்தெரிகிறது. பாமக கூட்டணியில் சேரும் சாத்தியங்களையும் தவிர்த்துவிட முடியாது.

வலைஞன் said...

மயிலாப்பூர் தொகுதியில் நெப்போலியன் தோல்வியடைந்துள்ளார். வளர்மதி உட்பட தமிழக அமைச்சர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.

ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுட்ன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி தெரிவித்தார். சென்னை கடற்கரையில் அகற்றப்ட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்றும் திருமண நிதியுதவித் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு 15000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்; பிற தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வலைஞன் said...

தமிழகத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் 126 தொகுதிகளில் திமுக அணியும் 43 தொகுதிகளில் அதிமுக அணியும் வெற்றி பெற்றுள்ளன.

காஞ்சீபுரம் ம்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி பெற்றுள்ளது.

மாநில அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிடும் அணைக்கட்டு தொகுதியில் 630 வாக்குகள் பதிவான ஒரு வாக்கு இயந்திரம் பழுதாகி உள்ளதால் பாமக வேட்பாளரை விட இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 39 வாக்குகள் மட்டுமே அவர் அதிகம் பெற்றுள்ள நிலையில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இயந்தியத்தை பழுது நீக்கும் முயற்சி நடைபெறுகிறது.

கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 98ல் இடதுசாரி முன்னணியும் 42ல் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. எனவே இடதுசாரி முன்னணி ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

ரேபரேலி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட சோனியாகாந்தி வெற்றி பெற்றுள்ளார்.