2006-08-31

ரஜினி சினிமா -புதிர் 1

rajini - hosted by http://tinypic.com


சூப்பர்ஸ்டார் நடித்த இந்தக் காட்சி இடம் பெற்ற படம் எது?

try it!

இந்தப் புதிருக்கு விடையும் விளக்கமும் இங்கே!

2006-08-28

தமிழ்மணம், தேன்கூடு

திரட்டிகளில் இப்போது மறுமொழி நிலவரம் சேவை தெரிய தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் வழங்கும் நிரல்களை வலைப்பதிவு டெம்ப்ளேட்டில் இணைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

தற்போது வேர்ட்பிரஸ் வலைப்பதிவு சேவையை பல தளங்கள் அளிக்கத் துவங்கியுள்ளன. வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருள் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. சிறப்பானதாகவும் உள்ளது. ஆனால் திரட்டிகளில் பதிவு/மறுமோழி நிலவரம் இடம் பெற இயலாததால் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

வேர்ட்பிரஸ் சேவைகள் அனைத்துமே Comments RSS என்னும் மறுமொழிக்கான ஓடையைக் கொண்டுள்ளன. எனவே திரட்டிகளில் மறுமொழி நிலவரம் தெரிய இந்த Comments RSS வசதியைக்கொண்டு மறுமொழி திரட்டும் வகையில் (Comments RSS ஓடைகளின் பேரோடையை உருவாக்கி!) நிரல் எழுதி திரட்டியில் வைத்தால் போதுமானது.

எந்த நிரலையும் பதிவர்கள் இணைக்காமலே மறுமொழி நிலவரத்தை இதன்மூலம் திரட்ட முடியும்.

திரட்டி சேவையாளர்கள் இதை மனதில் கொண்டு வேர்ட்பிரஸ் வலைப்பதிவர்களையும் மறுமொழி சேவை பெற உதவலாமே.

தொடர்புள்ள பதிவு

வேர்ட்பிரஸ் - பிளாக்கர்

2006-08-24

புதிய உமர் எழுத்துரு

தமிழ் கம்பியூட்டர் பத்திரிகையை நான் கம்பியூட்டர் வாங்குவதற்கு முன் (?) சந்தாகட்டி வாங்கிக் கொண்டிருந்தேன். சந்தா தீர்ந்த பிறகு புதுப்பிக்காமல் விட்டு விட்டேன். தமிழில் கம்பியூட்டர் பத்திரிகை நடத்தினாலும் இதழுக்கு இணைய தளமோ மின்னஞ்சல் முகவரியோ இல்லை. சந்தா கட்டுவதற்கும் புராதன வழிமுறைகள் தவிர வேறு வழியில்லை.

ஒருமுறை நண்பர் அழகி விஸ்வநாதன் தமிழ் கம்பியூட்டர் இதழுடன் பனாசியா நிறுவனத்தின் இலவச மென்பொருட்கள் அடங்கிய குறுவட்டு இணைத்து வழங்கப்பட்டிருப்பதாக மின்மடல் அனுப்பியிருந்தார். சரியான நேரத்தில் அவரது மடல் வந்ததால் தீர்ந்து போவதற்குள் இதழ் பிரதியை குறுவட்டுடன் வாங்க முடிந்தது.

அந்த குறுவட்டில் பல திறமூல மென்பொருட்களும் ஏராளமான தாம் (Tam) குறியேற்ற எழுத்துருக்களும் இருந்தன. கூடவே மென்பொருட்களின் சோர்ஸ்கோடும் (source code) மென்பொருட்களையும் எழுத்துருக்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றம் செய்யும் திறமூல உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.

ஒருங்குறி குழுமத்தில் புதிய யூனிகோடு எழுத்துரு உருவாக்குவது குறித்து பேசப்பட்டபோது பனாசியா எழுத்துருக்கள் பற்றி தெரிவித்தேன். கணிஞர் உமர்தம்பி அவர்கள் அவற்றை யூனிகோடாக மாற்றித்தருவதாக வாக்களித்தார். பிறகு சில நாட்கள் கழித்து பனாசியா எழுத்துரு ஒன்றை யூனிகோடு எழுத்துருவாக மாற்றம் செய்து சோதித்து பார்க்க அனுப்பியிருந்தார்.

ஆனால் அதன்பிறகு அவரைத்தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரது மரணச்செய்திதான் பிறகு அறிந்தது. அவர் கடைசியாக ஈடுபட்டிருந்த பணி இது. இதில் அவர் வேறு எழுத்துருக்களை செய்ததாக அறிய முடியவில்லை. ஆனால் அவர் கடைசியாக செய்த எழுத்துரு என்னிடம் இருக்கிறது. அதனை UmarUniTx என்ற பெயரில் வெளியிடுகிறேன்.

பின்வரும் சுட்டியில் எழுத்துருவை பதிவிறக்கம் செய்யலாம்.

UmarUniTx [font]


எழுத்துரு பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

2006-08-20

சிறந்த முதல்வர் யார்

ஒரு வாக்கெடுப்புசிறந்த முதல்வர்
தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் யார்?
கருணாநிதி
ஜெயலலிதா
எம்ஜிஆர்
அண்ணாதுரை
காமராஜ்
view results