2006-08-28

தமிழ்மணம், தேன்கூடு

திரட்டிகளில் இப்போது மறுமொழி நிலவரம் சேவை தெரிய தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் வழங்கும் நிரல்களை வலைப்பதிவு டெம்ப்ளேட்டில் இணைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

தற்போது வேர்ட்பிரஸ் வலைப்பதிவு சேவையை பல தளங்கள் அளிக்கத் துவங்கியுள்ளன. வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருள் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. சிறப்பானதாகவும் உள்ளது. ஆனால் திரட்டிகளில் பதிவு/மறுமோழி நிலவரம் இடம் பெற இயலாததால் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

வேர்ட்பிரஸ் சேவைகள் அனைத்துமே Comments RSS என்னும் மறுமொழிக்கான ஓடையைக் கொண்டுள்ளன. எனவே திரட்டிகளில் மறுமொழி நிலவரம் தெரிய இந்த Comments RSS வசதியைக்கொண்டு மறுமொழி திரட்டும் வகையில் (Comments RSS ஓடைகளின் பேரோடையை உருவாக்கி!) நிரல் எழுதி திரட்டியில் வைத்தால் போதுமானது.

எந்த நிரலையும் பதிவர்கள் இணைக்காமலே மறுமொழி நிலவரத்தை இதன்மூலம் திரட்ட முடியும்.

திரட்டி சேவையாளர்கள் இதை மனதில் கொண்டு வேர்ட்பிரஸ் வலைப்பதிவர்களையும் மறுமொழி சேவை பெற உதவலாமே.

தொடர்புள்ள பதிவு

வேர்ட்பிரஸ் - பிளாக்கர்

4 comments:

Anonymous said...

Thenkoodu tried this earlier, see this post.

http://www.thenkoodu.com/blog/2006/08/03/comments-pinger/
http://www.thenkoodu.com/blog/help/features/comments-aggregator/

வலைஞன் said...

தகவலுக்கு நன்றி

ஞானவெட்டியான் said...

அன்பு வலைஞரே!
WORDPRESSல் என்னென்னவெல்லாம் செய்துள்ளீர்கள்!! வியக்க வைக்கிறது;
பார்த்துப் பெருமூச்சு விடுவதைத் தவிற வேறொன்றும் செய்ய இயலாது; ம்..ம்..ம்..

வலைஞன் said...

நீங்களும் உங்கள் வலைப்பதிவில் நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளது தெரிகிறதே.

தேடத்தேடத்தான் கிடைக்கும். தோண்டத்தோண்டத்தான் நீரூறும்.
ஞானமொழி?