சமீபத்தில் தொலைக்காட்சி யொன்றில் ரஜினி நடித்த தமிழ் சினிமாவைப் பார்க்க நேர்ந்தது. இதுவரை பார்க்காத படமாக இருக்கிறதே என்று கொஞ்சம் ஆர்வத்தோடு பார்த்த போது அது ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப்படமான bloodstone படத்தின் தமிழாக்கம் என்று தெரிந்தது. ஆங்கிலப்படம் என்றவுடன் தொழில் நுட்பம் என்று பார்த்தால் இன்றைய ஆங்கிலப்படங்களில் உள்ள நேர்த்தி தெரியவில்லை. சொல்லப்போனால் இன்றைய தமிழ்ப்படங்களின் அளவு கூட இல்லை.
தேனிலவுக்காக இந்தியா வரும் வெள்ளைக்கார இளஞ்சோடி சந்திக்கும் பிரச்சினைகள் தான் கதை, மன்னர் கால மாணிக்கக் கல் ஒன்று திருடுபோகிறது. போலீஸ் துரத்தியதால் கொள்ளையர்கள் அதை தேனிலவு ஜோடியின் பைக்குள் இட்டுவிடுகிறார்கள். பிறகு அதைக் கைப்பற்ற கதாநாயகி கடத்தப்பட்டு பேரம் பேசப்படுகிறது. அதற்குள் இந்திய டாக்சி டிரைவரான ரஜினியின் கையில் அந்த வைரம் கிடைக்கிறது. ரஜினி கதாநாயகனுக்கு உதவுகிறார்.ரஜினிக்கு சேரிக்கார வாலுகள் உதவி. சேசிங், பைட்டிங் மசாலாக்களுக்குப்பின் கதாநாயகியும் மாணிக்கமும் மீட்கப்பட்டு சுபம். வழக்கமான மசாலா மிக்சர். வெள்ளைக்கார முகங்களுக்கு நடுவே ரஜினியின் கறுப்பு முகம் என்ற வித்தியாசம் மட்டும். நடுநடுவே ரஜினி ஜாக்கிசான் பாணி கலாட்டாக்கள் செய்வது மட்டுமே ஆறுதல்.
BloodStone - directed by Dwight Little
Producer: Ashok AmirthaRaj, MuraliManohar
Cast: Rajnikant, Breet Stimely, Anna Nicholas
Music :ilayaraja
1 comment:
thorndhu indha madhri post podungal nangalum konjam urchagamavom
Post a Comment