2006-09-29

படைப்பும் பார்வையும்

1

தேன்கூடு தளத்தில் லிப்ட் என்ற சொல்லுக்கு தரப்பட்டிருந்த பொருள் இந்தக் கவிதைக்கு வித்திட்டது. போட்டிக்கு அனுப்பிய பின் சில திருத்தங்கள் தோன்றியது. ஆனால் விதிமுறைகளின் படி பதிவில் திருத்தம் செய்யவில்லை. திருத்தப்பட்ட முழுக்கவிதை இங்கே.


கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

*
கொஞ்சம் லிப்ட்
கிடைக்குமா?
சாலையோரமாய்
அல்ல
வாழ்வினோரமாய்
காத்திருந்தேன்.

ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைக்கும் கூட்டம்
பெருகிவிட்ட காலத்தில்
ஏணிகள் அஞ்சுவது
இயற்கைதான்.

ஏறிவிட ஏணியில்லை
ஏற்றிவிட யாருமில்லை
வீற்றிருந்த காலமெல்லாம்
வீணாகிப் போனதிங்கே...

படிக்காத பாடங்கள்
படித்தபின்னே
புத்தியென்னும்
உத்தி தெளியும்

ஏணிவேண்டாம்
எவரும்வேண்டாம்
தன்னம்பிக்கை எனும்
தளரா உறுதி கூட
ஏணியாக ஏற்றிவிடும்...

தாமதமாய்
தானுணர்ந்து
ஏறுகிறேன்
வாழ்க்கையெனும்
ஏறுபாதையில்...

எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்...


[கவிதை]

விமர்சகர்கள் பார்வையில்:

சோம்பேறி பையன் விமர்சனம்:

வாழ்க்கை மீதுள்ள நம்பிக்கை பற்றிய கவிதை.

எளிமையான, சிற்சிறு வரிகள் கவிதைக்கு பலம்.
"எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்... "
போன்றவை ரசிக்க வைக்கின்றன.

கவிதை, நம்பிக்கை !!

முரட்டுக் காளை விமர்சனம்:

"சிகரம் எட்டுமென்ற நம்பிக்கையே நமக்கும் உரமாய்"

பின்னூட்ட விமர்சனம்:

#முரட்டுக்காளை கூறுவது:

கவிதை வாசித்தேன். அருமை.

*
2

போட்டிக்கான தலைப்பை வாசித்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக எழுதத் தோன்றியது. சிறுகதையின் இலக்கணங்களை உள்ளடக்கியதாக, துவக்கம், களம், சஸ்பென்ஸ், முடிவு என எல்லாம் அமைந்த ஒரு கதை, வாசித்த பிறகு கதை நிகழ்வு வாசகரின் மனத்திரையில் ஓடவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதியது. நோக்கத்தில் வெற்றி கண்டதாகவே கருதுகிறேன்.


கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

வேகமாகச் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" என்ற இளம்பெண் மறுநாள் சாலையோரம் கற்பழித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவளுக்கு எய்ட்ஸ்.


[இருவரிக்கதை]

விமர்சகர்கள் பார்வையில்:

சோம்பேறி பையன் விமர்சனம்:

இரண்டு வரிகளில் ஒரு அருமையான கதை.
க்ளைமேக்ஸ் நச்.
தேர்ந்தெடுத்த வார்த்தைகள், களம், முடிவு என அசத்துகிறது கதை.
நிச்சயம் படிக்க வேண்டும். கதை, கலக்கல் !!

முரட்டுக் காளை விமர்சனம்:

"நிமிடத்தில் படிச்சிடலாம்.
வியப்பு தான் அகல சிலநேரம் பிடிக்கும்."

பின்னூட்ட விமர்சனம்:

# அமுதன் கூறுவது:

நல்ல கதை....
இரண்டு வரிகளில் நச்சென்று இருக்கிறது.....
இருவரிக் கதை என்ற பெயரில் ஹைக்கூ கதை முயற்சி....
வாழ்த்துக்கள்,....

# நெல்லை சிவா கூறுவது:

பக்கம் பக்கமாக எழுதி கவர முற்பட்டுக் கொண்டிருக்க,
இரண்டே வரிகளில்,
இதயம் கவருவது திறமைதான். வாழ்த்துக்கள்

# முரட்டுக்காளை கூறுவது:

தலைப்பு கொடுத்தவரே கொஞ்சம் நிறைய எழுதியிருக்கிறார்.
நீங்க இப்படி 2 மார்க் பதில் எழுதுற மாதிரி ஆக்கீட்டிங்களே.. :-)
ஆனா சூப்பர்.

# Dubukku கூறுவது:

very nice attempt. have voted for this cheers :)

*
வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி!

No comments: