2006-09-15

தமிழ்மணம் சில பிரச்சினைகள்!

தமிழ்மணத்தில் முகப்புப் பக்கம் சிறப்பாக செயல்படுகிறது. மறுமொழி நிலவரங்களையும் உடனுக்குடன் காட்டுவது சிறப்பு.

இடுகைகள் பக்கத்திலும் எல்லாம் சுபமே. ஆனால் இடுகைகள் பக்கத்தின் ஒரு பிரிவான இடுகைகளில் தேட என்னும் பகுதி இப்போது செயலிழந்து விட்டது போலத் தோன்றுகிறது. அதில் சொற்களை இட்டுத் தேடும்போது பெரும்பாலும் தகவல் காணப்படவில்லை என்ற தகவலே வருகிறது. சில தினங்களுக்கு முன் தமிழ்மணத்தில் திரட்டப்பட்ட அறியப்பட்ட சொற்களைக்கொண்ட பதிவுகளைக்கூட பல சமயங்களில் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இது சற்று மேம்படுத்தப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

பதிவு கருவிப்பட்டைக்கு வழங்கப் பட்டிருக்கும் கோடிங் பிளாக்கர் தவிர சொந்த இணையப்பக்கத்தில் வலைப்பதிவு செய்யும் வேர்ட்பிரஸ் பயனாளிகளுக்கு மட்டுமே செயல்படுத்த முடிகிறது. blogsome வலைப்பதிவு சேவைக்கான கோடிங் நான் உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறேன். கருவிப்பட்டையும் தெரிகிறது. ஆனாலும் மறுமொழி நிலவரம் சேவை இதுவரை வழங்கப்படவில்லை.

பிளாக்கர் தவிர பிற வலைப்பதிவுகளில் உள்ள comment-feed வசதியைக் கொண்டு மறுமொழி நிலவரத்தை பதிவு கருவிப்பட்டை இல்லாமலே செயல் படுத்த இயலும். அதைச் செயல் படுத்தினால் பல வலைப்பதிவாளர்கள் பலன் பெறுவார்கள்.

அடுத்து முழுப்பட்டியல் என்னும் பகுதி. இதில் எந்த முறையில் வலைப்பதிவுகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன என்று தெரியவில்லை. அகர வரிசையிலும் ஒழுங்காக தொகுக்கப் படவில்லை. பல பதிவுகளை இதில் தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

முன்பு பழைய தமிழ்மணம் முதல் பதிப்பில் இது மிகச்சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அகரவரிசையில், காலவரிசையில் பதிவுகளை அடுக்கி நாடுவாரியாக பதிவுகளை காண முடிந்தது. அது ஏன் மாற்றப்பட்டது என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை.

தமிழ்மணத்தின் சிறப்பியல்புகளுக்கு முன் இவை சிறிய குறைபாடுகள்தான். ஆனால் அவற்றையும் களைந்து தமிழ்மணம் முழுமைபெற வேண்டும் என்ற ஆவல்தான்.

புதிய பூங்கா வலையிதழுக்கு வாழ்த்துக்கள்.

(ஒரு நினைவூட்டல்: பதிவுகள் பகுதியில் வலைப்பதிவு திரட்டிகள் தலைப்பில் புதிய தமிழ்ப்பதிவுகள் திரட்டிக்கான [http://tamilblogs.com/] சுட்டி இணைக்கப்படவில்லை)
*
வாசகர்களுக்கு:

விஜயகாந்தும் போலீசும்

தொடர்கதை படிக்க விரும்புவோருக்கு:

தொடர்கதை : ராசமணி

3 comments:

balachandar muruganantham said...

நானும் எனது தமிழ் பக்கங்களை தமிழ் மனத்திற்கு இணைத்திருக்கிறேன். ஆனால் எனது ஒரு பதிவுபாலச்சந்தர் முருகானந்தம்
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
ம் வருவதில்லை. நான் துருப்பால் என்ற பதிவுகளை கட்டுப்படுத்தும் கருவியை உபயோகிக்கிறேன். இதனை இங்கே காணவும். http://www.balachandar.net/pakkangal

நீங்கள் கொஞ்சம் உதவி புரிந்தால் எனது பதிவுகள் தமிழ் மனத்தில் வரும். எனது செய்தியோடையை தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com'ள் இணைத்துள்ளேன். அங்கு நன்றாக வந்துள்ளது.

newsintamil said...

இப்போது உங்கள் பதிவுகள் வருகிறதுதானே!

newsintamil said...

நண்பர் தூயவனுக்கு

மழை பதிவுக்கான உங்கள் பின்னூட்டத்தை வெளியிடவே நினைத்தேன். ஆனால் இந்த பதிவுக்கான உங்கள் பின்னூட்டத்தைப் படித்தவுடன் உஙகள் நோய் என்னவென்று புரிந்தது. நானுண்டு என் வேலையுண்டு என்று இருக்கிறேன். இங்கே உங்களுக்கு தீனி போட இப்போதைக்கு வசதியில்லைங்கண்ணா? போயிட்டு வாங்க.