2006-10-01

கவிதை -தேன்கூடுபோட்டிக்கு-1

விடுதலை?

நாம் நிரந்தரச் சிறைவாசிகள்
நமக்கெப்போது விடுதலை?

கருவறையிலிருந்து விடுதலையாகி
கல்லறைக்குச் செல்லுமுன்னே
இடையில்
இன்னுமொரு சிறைச்சாலை

சாதிக்கொடுமைகளிலிருந்து
மதமோதல்களிலிருந்து
ஊழல்களில் இருந்து
வன்கொடுமைகளிடமிருந்து
எப்போது விடுதலை

தேசத்தின் விடுதலை
அன்னியர்களிடமிருந்து
இந்த
தேகத்தின் விடுதலை
வன்முறைகளிடமிருந்து

எப்போது கிடைக்கும் விடுதலை?

1 comment:

செந்தில் குமரன் said...

நல்ல சிந்தனை ஆனால் பலர் பல இடங்களில் சொன்னதையே திரும்ப கேட்கும் உணர்வு.