2005-08-07

திருவாசகம் உருக்குகிறதா?

இளையராஜாவின் திருவாசக ஒலிவட்டு வெளியானது முதல் அதற்கு பலதரப்பட்ட விமர்சனங்களும் வந்து விட்டன. இன்றும் வந்து கொண்டுள்ளன. தமிழின் பெருமை, அரிய முயற்சி என்ற வகையில் அதைக் குறை கூறக்கூடாது எனவும், அதன் அசல் ஒலிவட்டையே எல்லோரும் வாங்கி அதனை ஆதரிக்க வேண்டும் என்பதாகவும் தமிழ் வலைப்பதிவுகளிலும் பிறவற்றிலும் பல நண்பர்கள் எழுதிய கருத்துக்களை வாசிக்க முடிந்தது.

இதனால் நானும் அசல் வட்டு கிடைக்கும் வரை கேட்பதில்லை என்று காத்திருந்தேன். சென்னையில் ஒரு பிரபலமான கடையில் வாங்கிவரப்பட்ட திருவாசக ஒலிவட்டை கணினியில் போட்டுக் கேட்டபின் சிலவற்றை எழுத வேண்டுமென்று தோன்றியது.

இளையராஜாவின் முயற்சி பாராட்டத் தக்கது. சிம்பொனி இசைக்குள் திருவாசகத்தை கொண்டு வந்திருப்பது அதற்கு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என்பதும் மகிழ்ச்சிக்குரியது. திண்ணையில் நாக இளங்கோவன் எழுதிய விமர்சனத்தில் இசைமுழக்கம் அதிகமாக இருப்பதான கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அதுவும் கூட சிம்பொனியின் தன்மையால் விளைந்ததுதானே தவிர வேறு வலிந்த பெருகோசை அல்ல. மற்றபடி இளங்கோவன் கூறியுள்ள பிழைகள் குறித்த கருத்துகள் ஆழமானவை. ஞாநி பாடலையோ இசையையோ அல்லாமல் திருவாசக இசை வெளியீட்டின் பின்னணி குறித்த தன் பார்வையை முன்வைத்துள்ளார். சாருநிவேதிதாவும் தன்பங்குக்கு தன்பாணியில் திருவாசக இசைக்கு அப்பாற்பட்டு இளையராஜாவை விமர்சனம் செய்திருக்கிறார். இவை போன்ற ஆழமான பின்னணி முன்னணிகளுக்குள் நுழையாமல் பாமர இசை ரசிகனாக இதைப் பார்ப்போம்.

நான் கேட்டவரையில் இசை வித்தியாசமான முயற்சி. புதிய அனுபவமாகவும் இருக்கிறது. பாடலின் உணர்வுகளுக்குள் நுழைந்து கேட்டால் உருக்கும் என்று சொல்லமுடியா விட்டாலும் இனிமையாகத் தான் இருக்கிறது.

குரல் தான் கொஞ்சம் உறுத்துகிறது. இளையராஜா தானே பாடியிருக்க வேண்டாம். ஹரிஹரன் அல்லது எஸ்பிபி பொருத்தமாக இருந்திருப்பார்கள். எப்போதோ எதிலோ திருவாசகத்திலிருந்து ஒரு துண்டு எஸ்பிபி பாடிக்கேட்டிருக்கிறேன். அதன் உருக்கம் இதில் குறைவுதான் என்னைப்பொறுத்தவரை.

இது உலகளாவிய இசை முயற்சி என கூறப்பட்டிருப்பதால் ஒலிவட்டின் தரமும் அப்படி இருந்திருக்க வேண்டும். ஆனால் கணினியில் போடும்போது ஒலிவட்டில் பாடல்களின் விபரமும் பாடகர்களின் விபரங்களும் கூட பதிவு செய்யப்படாமல் track1,track2 என பல்லிளிக்கிறது. அதனால் அது அசலா நகலா என்று சந்தேகமே வருகிறது. CD வாங்கிய நண்பர்கள் இதனை பரிசோதித்து உங்களுக்கு என்ன வருகிறது என்பதை தெரிவிக்கவும்.

இது குறித்த பத்ரியின் வலைப்பதிவு

4 comments:

ச.சங்கர் said...

இளயராஜா ஒலியமைத்த திருவாசகம் கேட்டதும் அப்படியே திரும்பத் திரும்ப கேட்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.
ஒரு வேளை என் போன்ற சினிமா பாட்டு மட்டுமே ரசிக்கும் இசை ஞானம் இல்லாத பாமரனுக்கு புரியாதோ என விட்டு விட்டேன்

வலைஞன் said...

//இளயராஜா ஒலியமைத்த திருவாசகம் கேட்டதும் அப்படியே திரும்பத் திரும்ப கேட்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.//

உண்மைதான். ஆனால் இது சினிமாப் பாட்டல்லவே.

Voice on Wings said...

அனுராக், உங்கள் கணினி இணையத்துடன் இணைந்திராத நேரங்களில் (ie. offline), புதிதாக உள்ளிடப் படும் குறுந்தகடுகள் track1, track2 என்றே 'பல்லிளிக்கும்'. காரணம், குறுந்தகடுகளின் விவரங்கள் CDDB என்னும் இணையச் சேவையின் வாயிலாகவே கணினியால் பெறப்படுகின்றன. ஒருமுறை அறிந்து கொண்ட பின், கணினி offlineஇல் இருக்கும் போதும் விவரங்களை நினைவு கொள்ளும். ஆகவே, நீங்கள் onlineஆக இருக்கும்போது திருவாசகக் குறுந்தகட்டை கணினியில் உள்ளிட்டுப் பாருங்கள். அதன் பிறகு தலைப்புகள் சரியாகக் காட்டப்படலாம்.

Anonymous said...

Reading your blog and I figured you'd be interested in advancing your life a bit, call us at 1-206-339-5106. No tests, books or exams, easiest way to get a Bachelors, Masters, MBA, Doctorate or Ph.D in almost any field.

Totally confidential, open 24 hours a day.

Hope to hear from you soon!