அன்னக்கிளி நீ வாடி....ஜெஸ்ஸி கிப்ட் என்ற பாடகர் இசையமைப்பாளர் அறிமுகமாகி பிரபலமான திரைப்படம் 4 the people என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி 4 students என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது. நான்கு மாணவர்கள் சேர்ந்து 4 the people இணையதளம் நடத்தி பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்று அன்னியன் பாணியில் (அன்னியனுக்கு முன்பே வெளியானது!) சமூக விரோதிகளை தண்டிக்கும் கதை கொண்ட இப்படத்தில் மாணவர்களைப் பிடிக்க வரும் ராஜன் மேத்யூ ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சுனில் என்ற புதுமுக நடிகர்.
புதிர் என்னவென்றால் இந்த சுனில் சமீபத்திய நேரடி தமிழ்ப்படமொன்றில் வேறொரு பெயரில் கதாநாயகனாக அறிமுகமானார். படத்தின் பெயர் என்ன? நாயகன் யார்?
2006-06-13
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
Chitram Pesuthadi - Naren
சித்திரம் பேசுதடி???
சித்திரம் பேசுதடி படத்தில் நரேன் என்ற பெயரில்'ன்னு நினைக்கிறேன்.
தெரியவில்லை :(
rsl, சுதர்சன்கோபால், ராசா உங்கள் பதில் சரி! இன்னும் சற்று அவகாசம் தந்து பின் உங்கள் மறுமொழிகளை வெளியிடுகிறேன். அதுவரை மற்றவர்களும் முயற்சிக்கலாம்.
rsl என்ன பெயர்(ச்சுருக்கமா)?
பிரபுராஜா ;-0
Haranprasanna நீங்கள் கூறியபடி படத்தின் பெயர் சரிதான்
பதில் சரின்னு சிலருக்குச் சொல்லிட்டு, அப்புறம் எதுக்கு இன்னும் அவகாசம் தர்றீக?
புரியலைங்களே(-:
rsl, ராசா இரு கேள்விகளுக்கும் சரியான பதிலளித்துள்ளீர்கள். சுதர்சன், Haran படத்தின் பெயரை மட்டும் தந்திருக்கிறீர்கள்.
பங்கேற்ற நண்பர்களுக்கு நன்றி.
துளசி அக்கா
விடைகள் சரின்னு நேற்று சொன்னாலும் அவைகள் மட்டுறுத்தல் செய்யப்பட்டிருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அவைகளை வெளியிட்டுவிட்டேன். அவர்கள் எழுதிய நேர வரிசைப்படி பிரசுரமாகி விட்டதால் இன்று நீங்கள் படிக்கும்போது விடைகளை எழுதிய பின்னும் ஏன் இன்னும் அவகாசம் என்று குழம்பி விட்டீர்கள். என் முந்தைய மறுமொழிக்கு ஒரு நிமிடம் முன்னால் தான் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதனால் அதுவும் மேலே சென்று விட்டதைக் கவனித்தீர்களா?
Post a Comment