2005-03-31

ரம்பம்



ப்போதெல்லாம் அந்த நாள் வந்து விட்டால் அன்று பள்ளிக்குப் போகும் பிள்ளைகளில் பாதிப்பேர் மாலையில் சட்டை நிறைய மைக்கறைகளுடன் தான் வீடு திரும்புவார்கள். எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாமல் அந்த நாளில் எல்லோரும் செய்கிறார்களே என்று அவர்கள் மாறிமாறி அதைச் செய்வார்கள். மற்ற நாட்களில் அவ்வாறு செய்தால் முதுகுத்தோல் உரிந்து போகும் என்று அவர்களுக்குத் தெரியும். முன்பெல்லாம் ஹோலிப்பண்டிகையை யாரும் அறிந்ததில்லை. ஆனால் இன்று ஹோலியின்போது நடக்கும் எல்லாக் கூத்தும் இந்த நாளில் நடக்கும்.

மேல்நாட்டு இறக்குமதியான இந்த நாள் எப்படி இந்தளவு பிரபலமானது என்றே தெரியவில்லை. (இப்போது வாலன்டைன்ஸ் டே போல.)

ஆனாலும் இப்போதெல்லாம் (கொஞ்சம் வளர்ந்த பிறகு) அந்த நாள் பல சமயங்களில் நினைவுக்கே வருவதில்லை. இப்போதும் பள்ளிப் பிள்ளைகள் மத்தியில் இந்த நாளின் கிரேஸ் இருக்கக் கூடும்.

அந்த நாட்களை நினைக்கையில் மாறிமாறி எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்று நினைத்துப் பார்த்தால், தாளில் பொதிகட்டி காசுப்பொட்டலம் போல யாராவது வரும் வழியில் வைத்துவிடுவது, மிட்டாயை வாங்கித் தின்றுவிட்டு மிட்டாய்த் தாளில் கல்லைப் பொதிந்து வைப்பது, ரூபாய் நோட்டில் நூலைக்கட்டி குட்டிச் சாத்தான் ஆடுவது, என்று பாதகமில்லா ஏமாற்றுக்கள் தவிர உறவினர்களுக்கு உடம்புக்கு முடியவில்லை எனப்புளுகுவது, சமயத்தில் இறந்து விட்டதாகவும் பயமுறுத்துவது என சென்டிமென்டாகவும், பரபரப்புச்செய்திகளாக பொய்வதந்தி பரப்புவது முதற்கொண்டு நடக்கும். இன்னொரு தளத்தில் ஆணின் பெயரால் பெண்ணுக்கும், பெண்ணின் பெயரால் ஆணுக்கும் லவ் லெட்டர் எழுதுவதும் சுறுசுறுப்பாக நடக்கும்.

நாளின் ஞாபகம் இல்லாத அப்பாவிகள் விழுந்து விடுவார்கள். ஒரே கூத்துதான்.

உங்களில் பலருக்கும் வித்தியாசமான முட்டாள் தினஅனுபவங்கள் இருக்கக் கூடும். மறுமொழியாக எழுதுங்கள்.

3 comments:

Vijayakumar said...

//முன்பெல்லாம் ஹோலிப்பண்டிகையை யாரும் அறிந்ததில்லை. ஆனால் இன்று ஹோலியின்போது நடக்கும் எல்லாக் கூத்தும் இந்த நாளில் நடக்கும்.

மேல்நாட்டு இறக்குமதியான இந்த நாள் எப்படி இந்தளவு பிரபலமானது என்றே தெரியவில்லை. (இப்போது வாலன்டைன்ஸ் டே போல.)
//

தலீவா!! ஹோலி ஒன்னும் மேல்நாட்டுல இருந்து வந்த மாதிரி தெரியலையே. எனக்கு தெரிஞ்சி வட இந்தியாவில கொண்டாடுவாங்க. இந்திய கலச்சாரத்தை சொல்ற விழாக்களில் அது ஒன்று என்று சொல்வார்கள். மேலும் இது எதோ இந்திரனை மகிழ்விப்பதற்காக கொண்டாடப் படுவது என்பது ஐதீகம் என நினைக்கிறேன். வேறு யாராவது விளக்கம் கொடுத்தால் நல்லாயிருக்கும்.

Chandravathanaa said...

அனுராக்
எனதுஅனுபவங்களில் ஒன்று

வலைஞன் said...

விஜய்
மேல் நாட்டில் இருந்து வந்ததாக குறிப்பிட்டிருந்தது முட்டாள்கள் தினத்தை.
ஹோலி வடநாட்டில் இருந்து வந்ததுதான். முன்பெல்லாம் ஹோலி அதிகம் அறிமுகமாகவில்லை.
அறிமுகமான AF நாளில் சாயம் கலக்கி ஊற்றுவதெல்லாம் உண்டு