2005-07-05

சாதனைச்சிறுவன் ஜனா!

ஐந்து வருடங்களுக்கு முன்வரை எல்லோரையும் போல துள்ளி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்தான் இவனும். ஆனால் இன்று? இரு கைகளையும் ஒரு காலையும் இழந்து வாழ்வின் பல இன்பங்களை இழந்த வேதனைக்கு உள்ளானவன். என்ன தான் நிகழ்ந்தது இவன் வாழ்வில்?
Image hosted by TinyPic.com

அது புத்தாயிரமாண்டில் மார்ச் நான்காம் தேதி. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 8 வயது ஜனார்த்தனன் பள்ளி விட்டு வீடு திரும்பியபின் மொட்டைமாடியில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். அங்கே கிடந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்துச் சுழற்றியபடி இருந்த போது அந்த விபரீதம் நிகழ்நதது. அருகிலிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் அவன் கையிலிருந்த கம்பி உரச மின்சாரம் ஜனாவின் உடலில் பாய்ந்தது. டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதற, உறவினர்கள் வந்து பார்த்த போது பாதி வெந்த, வெந்து கொண்டிருந்த ஜனாவின் உடலைத் தான் கண்டார்கள்.
Image hosted by TinyPic.com
ஊசலாடிக் கொண்டிருந்த உயிரை மருத்துவர்கள் அரும் பாடுபட்டு மீட்டார்கள். தோள்வரை வலதுகரம், மூட்டுவரை இடதுகரம், மூட்டுவரை இடதுகால், வலதுகாலின் முன்பாதம் ஆகிய கருகிய பாகங்களை அகற்றி இன்றைய ஜனாவுக்கு மறுபிறவி கொடுத்தனர் மருத்துவர்கள்.

வாழ்வே சோதனைக்கு உள்ளான ஜனாவுக்கு படிப்பும் கேள்விக்குறியானது. பல பள்ளிகள் அவனைச் சேர்த்துக் கொள்ளத் தயங்கின. SRNM மெட்ரிக் பள்ளி அவனைச் சேர்த்துக் கொண்டது. ஜனா இன்று ஏழாம் வகுப்பில் படிக்கிறான்.
Image hosted by TinyPic.com

அவன் வாயினால் பென்சில் பிடித்து எழுதக் கற்றுக்கொண்டான். வாயினாலேயே படிப்படியாக படங்கள் வரையவும் கற்றுக் கொண்டான். அதுவே அவன் வாழ்வில் புதிய வசந்தத்தைக் கொண்டு வந்து சேர்த்தது.

ஜனா ஓவியப்போட்டிகளில் பரிசுகள் குவிக்கத் தொடங்கினான். உலகளாவிய அளவில் ஜனாவின் ஓவியங்கள் பாராட்டப் படத்துவங்கியது. கணிப்பொறி வரைகலையிலும் தேர்ச்சி பெற்றுள்ள ஜனாவுக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. 2003 ல் தமிழக முதல்வரிடம் பரிசு பெற்ற ஜனா இந்த வருடம் ஏப்ரல் 21 அன்று குடியரசுத் தலைவரிடம் 'பாலஸ்ரீ' விருது பெற்றான்.
Image hosted by TinyPic.com

'அழகி' மென்பொருள் தயாரிப்பாளர் திரு. விஸ்வநாதன் தனது வலைத்தளத்தில் ஜனாவுக்கென்றே ஒரு வலையகத்தை நிறுவி ஜனா பற்றிய விரிவான தகவல்களையும் ஏராளமான புகைப்படங்களையும் இணையத்தில் இட்டுள்ளார். (இங்குள்ள படங்களும் இத்தளத்திலிருந்து எடுக்கப் பட்டவையே)

ஜனாவின் வலைப்பக்க முகவரி: http://www.azhagi.com/jana

11 comments:

வலைஞன் said...

பிளாக்கரின் புதிய படம் போடும் வசதியை நம்பி ஏமாந்ததன் விளைவாக இந்தப்பதிவில் நீங்கள் invisible படங்களைத்தான் பார்க்க முடியும். முடிந்தால் இன்றிரவு அவற்றை visible ஆக்க முயல்கிறேன்.

Vijayakumar said...

ஜனாவின் சாதனைகளை நானும் நன்கு அறிவேன். மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அனுராக்.கைகால்கள் நல்ல இருந்தும் பயனற்று இருக்கும் மனிதர்களிடையே இவனின் சாதனை பெருமைப்படக் கூடியது. பதிவுக்கு நன்றி

ROSAVASANTH said...

இந்த பதிவிற்கு மிகவும் நன்றி அனுராக். நான் இதை இப்போதுதான் அறிகிறேன்(நீங்கள் முன்னரே எழுதியிருந்தால் தவறவிட்டிருக்கிறேன்.) மனதை என்னவோ செய்துவிட்டது.

Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
வலைஞன் said...

நன்றி விஜய், வசந்த்!
இதை எழுத நினைத்து வெகு நாட்களாகி விட்டது. ஆனால் இன்று தான் எழுத முடிந்தது. ஆனால் தமிழ் வலைப்பதிவுகளிலேயே சுபா 2004 ஜனவரி 17 ல் Janaஎன்றப் பதிவையும் சந்திரவதனா 2004 ஜூன் 03 ல் ஊனத்தை வென்ற சாதனையாளன் என்னும் பதிவையும் வெளியிட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

பத்மா அர்விந்த் said...

எனக்கு தெரிந்த வரை முடியாது என்று சொல்லும் போதுதான் ஒரு வேகம் வருகின்றது. இது போல பல சிறுவர்கள் சாதிப்பதை பார்க்கும் போது அவர்கள் மேலும் வளர ஏதேனும் செய்ய வேண்Dஉம் என்ற ஆவல் பிறக்கிறது.
ஜனாவை பற்றி முன்பே படித்திருக்கிறேன். என் மகனுடனும் பகிர்ந்து கொண்டேன். நன்றி

டண்டணக்கா said...

என்ன ஒரு தன்னம்பிக்கை, அசத்துகிறான் இந்த சிறுவன். ஓவியங்கள் மிகவும் அழகு, அவனின் சிரிப்பை போன்றே. சிறுவனும், அவனுக்கு உறுதுணையாய் உள்ள பெற்றோரும், ஆசிரியர்களும், சமுதாயத்திற்க்கு எடுத்துக்காட்டானவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
-டண்டணக்கா

வலைஞன் said...

*
ஃபயர்பாக்சில் பதிவு சரியாகத் தெரிகிறதா நண்பர்களே?
*

வலைஞன் said...

ஒருவழியாக இன்று படங்களை பதிவேற்றி விட்டேன். பிளாக்கரில் நேரம் வீணானது தான் மிச்சம். டைனிபிக் தான் நமக்குத் தஞ்சம்.

enRenRum-anbudan.BALA said...

அனுராக்,

arumaiyAna pathivu ! nanRi.

வலைஞன் said...

ஈஸ்வர பிரசாத்
அது நானல்ல. இந்தியாவிற்கு வெளியே நான் சென்றதுமில்லை.