2006-05-07

தேர்தல்நாள் செய்திகள்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலையிலேயே காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பணம்கொடுக்க முயன்றதாக அதிமுகவினர் மீது திமுகவினரும், திமுகவினர் மீது அதிமுகவினரும் ஆங்காங்கே குற்றச்சாட்டு பதிவு செய்து வருகின்றனர்.

இரண்டு செய்திகள்

1.சன் செய்திகள்

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிமுகவினரால் தாக்கப்பட்டார். அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து தாக்குதல்.

2. ஜெயா செய்திகள்

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வாக்காளர்களுக்கு பணம்கொடுக்க முயன்றபோது சுற்றி வளைப்பு. பெட்டி பெட்டியாக பணத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

updates below (Comments section)

7 comments:

krishjapan said...

சுடச் சுட சுட்ட செய்திகளை சுட்டுவதற்கு நன்றி.

Anonymous said...

சபாஷ் சரியான போட்டி உங்களுக்கும் இட்லி-வடை க்கும்...

வலைஞன் said...

News Update 2 pm

முதல்வர் வேட்பாளர்களான கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியிலும் ஜெயலலிதா ஆயிரம்விளக்கு தொகுதியிலும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

மற்ற கூட்டணித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பல்வேறு தொகுதிகளில் தங்கள் வாக்குகளைப்பதிவு செய்தனர்.

வாக்குப்பதிவு இதுவரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்த அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவே நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

பாண்டிச்சேரியிலும் வேறு சில மாநிலங்களிலும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. சோனியாகாந்தி போட்டியிடும் ரேபரேலி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் இன்று நடை பெறுகிறது.

வலைஞன் said...

Live comentry இட்லிவடையார் தருகிறார் நம்மால் நெருங்கக்கூட முடியாது.

நட்சத்திர இட்லி வடையாருக்கு இங்கேயே வாழ்த்து சொல்கிறேன். அப்புறமா அங்கே வாறேன்.

வலைஞன் said...

Update:

சொல்லவேண்டியதை எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லிவிட்டேன். -ஜெயலலிதா

200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். திமுக ஆட்சி அமைக்கும்.-கருணாநிதி

பொதுவாக அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட சிறு பழுதுகளால் சற்று தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. ஆனாலும் எல்லா மையங்களிலும் சரியாக மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்படும். -தேர்தல் ஆணையர் அறிவிப்பு.

தமிழத்தில் பல இடங்களில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், கள்ள ஓட்டுப்பொட முயன்றதாகவும் கலவரம் செய்ய முயல்வதாகவும் ஜெயா டிவியில் தொடர்ந்து செய்திகள் ஒளிபரப்பப் படுகின்றன.

இன்று காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி வாசன், திமுக தலைவர்கள் அன்பழகன், ஸ்டாலின், தயாநிதிமாறன், இந்திய கம்யூனிஸட் தலைவர்கள் நல்லக்கண்ணு, ராஜா, பார்வர்டு பிளாக் தலைவர் நடிகர் கார்த்திக் ஆகியோர் சென்னையில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்திலும் மதிமுக தலைவர் வைகோ கலிங்கப்பட்டியிலும் விடுதலைச்சி றுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆண்டிமடத்திலும் பாமக தலைவர்கள் ராமதாஸ் ஆன்புமணி ஆகியோர் திண்டிவனத்திலும் மார்க்சிஸ்ட் தலைவர் வரதராசன் திண்டுக்கல்லிலும் வாக்குப்பதிவு செய்தனர்.

தமிழகத்தில் பல இடங்களில் குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வாக்காளர்கள் வாக்குப்பதிவைப் புறக்கணித்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

krishjapan said...

தோல்விக்கு இப்பவே காரணத்தைத் தயார்படுத்தியாச்சு - கள்ள ஓட்டு போட்டனர், அரசு ஊழியர்களான தேர்தல் அதிகாரிகள் ஒத்துழைப்போடு...

வலைஞன் said...

Update 5.10 pm

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. சில சிறு சம்பவங்கள் தவிர அதிக அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக தேர்தல் நடைபெற்றுள்ளது. வரும் 11 ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை துவங்கும். அன்று பகல் 11 மணியளவிலேயே யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது தெளிவாகி விடும்.