2006-09-03

ரஜினி புதிர் 2 விடை

கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு
மனுசன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு (2)
ஐயா மேலே சாமி வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும் (2)

அந்திபட்ட நேரத்திலே சந்திரன ஒருத்தன் பார்த்தான்
அவன் கூட வந்தவனும் சூரியன் தான் அதுன்னான்
சந்திரனா சூரியனா சண்ட வந்து சேர்ந்ததய்யா
இந்த நேரம் பார்த்து..எதுத்தால ஒரு மனுசன்
தள்ளாடி தள்ளாடி தல கீழா நடந்து வந்தான்
சண்டையிட்ட ரெண்டு பேரும் சாட்சியா அவன வச்சி
சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு என்னான்..
எனக்கொன்னும் தெரியாது நா வெளியூருன்னு பூட்டான் அவன்

என்ன தான் போட்டாலும் நிதானம் தான் தப்பாது
இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதையா
கன்னியை தாயென்பேன் கிழவியை கன்னி என்பேன்
கன்ரோலு கொஞ்சம் கூட கொறையாதையா
அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
யாரு பெரியவன்டா டேய் தம்பி

[கடவுள்...]


ஒரு பெண்ண பார்த்தேன்.. என்னம்மா கல்யாணம் ஆச்சான்னேன்..
ஆகலன்னா.. குழந்த குட்டி இருக்கான்னேன்...குடுத்தா பளார்னு
நா விடுவேனா.. அடுத்த பெண்ண பார்த்து
முன்கூட்டியே குழந்த குட்டி இருக்கான்னேன்
ஆமா! ரெண்டு கொழந்த இருக்குன்னா...
அப்புறம் தான்..கல்யாணம் ஆச்சான்ன்னு கேட்டேன்..
அன்னைக்கு தான் தங்க பல்லு கட்டவேண்டிய அவசியம் வந்தது.

விஸ்கிய போட்டேன்னா இங்கிலிசு பாட்டெடுப்பேன்
சாராயம் உள்ளே போனா தமிழ் பாட்டு.
கள்ள குடிச்சேன்னா நாடோடி பாட்டு வரும்
கல்லுக்கும் டான்சு வரும் அத கேட்டு.
அட ஆகாயம் கால் மேலே...பூலோகம் கை மேலே
ஆடி காட்டுகிறேன் வா நைனா..

[கடவுள்...]


படம்: போக்கிரிராஜா

ரஜினி, ஸ்ரீதேவி, ராதிகா, முத்துராமன் நடித்தது.

1. பாடல் கேட்க

2. mp3 download

4 comments:

கோவி.கண்ணன் [GK] said...

கை கொடுக்கும் கை !

கோவி.கண்ணன் [GK] said...

என்ன புதிர் என்று சொல்லவே இல்லையே !
படம் பேரு போக்கிரி ராஜான்னும் போட்டுடிங்க !

G.Ragavan said...

இந்தப் படத்துக்கு இசை மெல்லிசை மன்னர். அந்தத் தகவலையும் சொல்லியிருக்கலாம்.

விடிய விடிய சொல்லித் தருவேன்
நான் போக்கிரிக்குப் போக்கிரி ராஜா போன்ற நல்ல பாட்டுகள் கொண்ட படம்.

வலைஞன் said...

கோவி.கண்ணன்

//என்ன புதிர் என்று சொல்லவே இல்லையே !
படம் பேரு போக்கிரி ராஜான்னும் போட்டுடிங்க !//

போன பதிவை நீங்க பார்க்கவில்லையா?

அது சரி நீங்க கை கொடுக்கும் கைன்னு சொன்னது எதுக்குன்னு தான் புரியவே இல்லை.

ராகவன்
மெல்லிசை மன்னரின் பெயர் விடுபட்டது தவறுதான்.