2006-09-14

பயர்பாக்சும் தமிழும்

இன்று இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற மைக்ரோசாப்ட் வலையுலாவிக்கு மாற்றாக பயர்பாக்ஸ் என்ற திறவூற்று வலையுலாவி பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பொதுவில் பயர்பாக்ஸ் ஒரு சிறந்த வலையுலாவியாக இருந்தாலும் புதிய இணைய அலங்காரங்கள் உள்ள பக்கங்களில் தமிழ் போன்ற மொழிகளை குறிப்பாக யூனிகோடு எழுத்துருக்களை சரியாகக் காண முடிவதில்லை என்பது மிக முக்கியமான குறைபாடாக இருந்து வருகிறது.

வலைப்பதிவுகளில் இன்று பல புதிய வடிவமைப்புகள் உருவாகி வருகின்றன. அவற்றை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியில் அழகாகக் காண முடிகிற அளவுக்கு பயர்பாக்ஸ்சில் காண முடிவதில்லை. ஆனாலும் அதன் பிற பயன்பாடுகள் அதை சிறந்த உலவியாக நிலைநிறுத்துகின்றன. ஆனால் மொழியைச் சரியாகக் காட்ட முடிவதில்லை என்பது பெரிய குறைதானே?

இதற்கு என்ன மாற்று என்று சிந்திக்கும்போது இப்போது பத்மா என்ற இணைப்பு நீட்சி இதற்கு தீர்வாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இதிலும் சில குறைபாடுகள் சொல்லப் படுகிறது.

அதேசமயம் அனைத்து பிரச்சினைகளும் வலைப்பக்க நிரல்களால் உருவாவதால் அதே நிரல்களில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.

முதலாவதாக பல வலைப்பதிவுகளில் தலைப்புப்பகுதி எழுத்துக்கள் இழைபிரிந்து நிற்கின்றன. இதற்குக் காரணமாக அமைவது letter-spacing என்ற பண்பை style sheet எனப்படும் அலங்கரிப்பு/வடிவ சீரமைப்பு நிரலில் இணைப்பது தான். எனவே இந்த வரியை/நீக்கி விடுவதன் மூலம் இயல்பான எழுத்து இடைவெளியை உலாவிகள் உணர்ந்து கொள்ளும். சில இடங்களில் line-space என்ற பண்பும் பிரச்சினை செய்யலாம். அதையும் நீக்கி சோதிக்கலாம். ஆனால் சில வலைவடிவமைப்புகளில் !important என்று குறிப்பிட்டு மேற்கண்ட letter-spacing பண்பை வைத்திருப்பார்கள் அதில் மாற்றம் செய்தால் பக்க அமைப்பில் குளறுபடிகள் நேரலாம். அதை சற்று நிதானமாக சோதித்து வேறு மாற்றங்களையும் செயல்படுத்த வேண்டும்.

அடுத்ததாக மற்றும் முக்கியமாக text-align:justify என்ற பண்பை பயன்படுத்தும்போது இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் பக்கம் அழகு பெறுகிறது. அதேசமயம் பயர்பாக்ஸ்சில் எல்லா எழுத்துக்களும் கலைந்து குப்பையாகி விடும். இதற்கு ஒரு எளிய நிரலை style sheet இல் இணைப்பதின் மூலம் தீர்வு காணலாம்.

முதலில் text-align:justify என்ற பண்பு style sheet இல் எங்கெங்கு காணப்படுகிறதோ அவற்றை நீக்கி விட வேண்டும். அடுத்து பின்வரும் நிரலை style sheet இன் ஆரம்பத்தில் இணைக்க வேண்டும்.
----------------
body, p{
text-align: justify;
}
html>body, p{
/* only firefox can read this. IE can't */
text-align: left;
}
----------------
இதன் மூலம் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் text-align:justify செயல்படவும் பயர்பாக்ஸ்சில் பழையபடி text-align:left ஆகவும் இருப்பதால் எழுத்துக்கள் சரியாக வெளிப்படுகின்றன.

இவை முன்பு பயர்பாக்ஸ் பற்றிய விவாதங்கள் நடைபெற்ற போது நண்பர்களால் முன்வைக்கப்பட்ட பல யோசனைகளில் மிக எளிமையானவையும் வெற்றிகரமானவையுமாக என்னால் சோதித்தறியப் பட்டவை.

இந்த மாற்றங்கள் நான் வெற்றிகரமாக என் வலைப்திவுகளில் பயன்படுத்தி செயல்படுத்தியவை. எனவே நிச்சயமாக இவை பயன்தரும்.

நீங்களும் முயன்று பாருங்கள்.

11 comments:

இலவசக்கொத்தனார் said...

மற்றவர்கள் இந்த அலைன்மெண்டை மாற்றவில்லை என்றாலும் அதை ஃபயர்பாக்ஸில் சரியாகப் படிக்க வழி இருக்கிறதா?

வலைஞன் said...

குழம்பித்தெரியும் வலைப்பதிவுகளைப் படிக்க பயர்பாக்சைத் திருத்துவது என்பது ஒரு வழி. அதற்கு பத்மா போன்ற நீட்சிகள் உதவுகின்றன.

குழப்பத்திற்குக் காரணமான நிரல்களைத் திருத்துவது இன்னொரு வழி. இதில் சம்பந்தப் பட்ட வலைப்பதிவுகளில் தான் திருத்தம் செய்யப் பட வேண்டும். இந்த வழியைத்தான் நான் கூறி இருக்கிறேன்.

சும்மா அதிருதுல said...

இண்டர்நெட் எக்ஸ்புளோர் நல்லா வேலை செய்யும் போது ஏன்..இதை பயன் படுத்த வேண்டும்.

எக்ஸ்புளோரில் எதுவும் குறை உள்ளதா...?

மு. மயூரன் said...

//இண்டர்நெட் எக்ஸ்புளோர் நல்லா வேலை செய்யும் போது ஏன்..இதை பயன் படுத்த வேண்டும்.

எக்ஸ்புளோரில் எதுவும் குறை உள்ளதா...?
//

இன்டர்நெட் எக்ச்புளோரர் வின்டோசிலும் மாக்கிலும் மட்டும்தான் வேலைசெய்யும். மற்றைய இயங்குதளங்களுக்கு இல்லை. அத்தோடு ஃபயர்ஃபாக்ஸ் இலுள்ள வசதிகளோடு ஒப்பிட்டால் IE ஒரு சிறு தூசிக்கும் சமானமாகாது. ஒருமுறை firefox இனை முழுமையாக உபயோகித்தவர்கள் IE இனை திரும்ப பயன்படுத்துவது ரொம்ப கஷ்டம்..

எல்லாவற்றையும்விட, IE ஒரு கம்பனிக்கு சொந்தமானது Firefox மக்களுக்கு சொந்தமானது. (சட்டரீதியாகவேகூட)

Santhosh said...

நன்றி மயூரன், உங்க பதிவின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது :).

வலைஞன் said...

சந்தோஷ்
மயூரன் பதில் சொன்னதால் இது மயூரன் பதிவு என்று எண்ணி விட்டீர்களோ அல்லது மயூரன் பதிவில் இடவேண்டிய மறுமொழியை இங்கு இட்டு விட்டீர்களோ :-)))

வடுவூர் குமார் said...

"Text-align" இதையெல்லாம் மாற்றவேண்டும்....
ஆமாம் எங்கு-எப்படி என்று சொல்லவில்லையே??(URL தட்டச்சு செய்யும் இடத்தில் about:config அடித்து என்டர் செய்யவும்- சரியா?)
புதிதாக படிப்பவர்களுக்கு கொஞ்சம் மூச்சு தினறும்.
அதையே இன்னொரு பதிப்பாக போடவும்.
மக்கள் நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.

வலைஞன் said...

ஐயகோ இப்படிக் குழப்பி விட்டீர்களே குமார்.
பயர்பாக்சை சீர்செய்ய padma வை பதிவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைப்படி....

ஆனால் நான் சொன்னதெல்லாம் பயர்பாக்சில் சரியாகத் தெரியாத வலைப்பதிவுகளுக்கு உரியவர்கள் தங்கள் வலைப்பதிவின் டெம்ப்ளேட்டில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள் தான்.

பிளாக்கரில் உள்நுழைந்து (பாஸ்வேர்டெல்லாம் கொடுத்துத்தான் :-0) change settings வழியாக சென்று template சுட்டியை சொடுக்கி டெம்பிளேட் நிரலில் தான் திருத்தம் செய்ய வேண்டுமய்யா?

வலைஞன் said...

பிளாக்கரில் உள்நுழைந்து (பாஸ்வேர்டெல்லாம் கொடுத்துத்தான் :-0) change settings வழியாக சென்று template சுட்டியை சொடுக்கி டெம்பிளேட் நிரலை காணலாம்.
-----------
body, p{
text-align: justify;
}
html>body, p{
/* only firefox can read this. IE can't */
text-align: left;
}
---------------
மேற்கண்ட நிரலை style பகுதியில் இணைத்து
save template changes சுட்டியை சொடுக்கி republish பொத்தானையும் சொடுக்கினால்....போதும்!

இந்த விளக்கம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? :-)))

வடுவூர் குமார் said...

ஒஹோ!!
இப்போது புரிந்தது.
குழப்பத்திற்கு மன்னிக்கவும்.
நல்ல வேலை எனக்கு அந்த பிரச்சனையில்லை.

நாடோடி said...

Your page is still not looking correctly to me.
I did a posting for this with screen shot.
please see the following.
http://pgs-manian.blogspot.com/2006/09/blog-post_15.html