அட யாருப்பா அது? கல்யாணமான பொண்ண லுக் விடறது?
கேள்வியை நன்றாகப் படித்து பதிலை மண்டபத்தில் (சாரி மறுமொழியில்) வைத்து விடுங்கள்...
1. ஜோதிகாவின் திரையுலக முதல் நாயகன் யார்?மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்காமல் காப்பியடிக்காமல் பதில் கூறும் புலவருக்கு இம்சை அரசன் பரிசுகளை 100 சவுக்கடிகளாக வழங்குவார்.
2. தமிழில் ஜோ நடித்த முதல் படம் எது
3. ஜோதிகா சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருது பெற்ற படம் எது?
4. ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்த அயல்நாட்டு நடிகர் யார்?
5. நக்மாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடைப்பட்ட மற்ற சகோதரி யார்?
6. ஜானகி என்ற கதாபாத்திரத்தில் ஜோ நடித்த படம் எது?
7. ஜோதிகா சூர்யாவுடன் நடித்த முதல் படம் எது?
*
அமானுஷ்ய ஆவியின் திருஷ்டி பட்ட மோகினி இங்கே...
28 comments:
1.அஜித்
2.வாலி
3.பேரழகன்
4.பென்ட்லி மிட்சம்
5.ரோஷினி
6.தெனாலி
7.பூவெல்லாம் கேட்டுப்பார்
சோதிகாவ மறந்து ரொம்ப நாள் ஆச்சு, யாருப்பா அது திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தறது!
முதல் பதிலுக்குச் சொந்தக்காரரான் "தம்பி" 6/7 மதிப்பெண் பெறுகிறார்.
//சோதிகாவ மறந்து ரொம்ப நாள் ஆச்சு, யாருப்பா அது திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தறது!//
கல்யாணமாகி பத்து நாள்கூட ஆகவில்லை. அதுக்குள்ள மறந்து ரொம்ப நாள் ஆச்சுங்கறியே தம்பி. இது நியாயமா?
1.முதல் திரையுலக நாயகன் - அஜித்
2. முதல் படம் - வாலி
3. சந்திரமுகி
4. லிட்டில் ஜான் ஹீரோ
5. ரோஷினி
6. ...!?
7. பூவெல்லாம் கேட்டுப் பார்
அமானுஷய ஆவிக்கு மூணரை மதிப்பெண் 3.5/7
4. Bentley Mitchum (லிட்டில் ஜான்)
6. சிநேகிதியே.
1. Akshaye (Doli Sajake Rakhna )
எது தப்பு?
அமானுஷய ஆவிக்கு
இப்போது அரைமார்க் கொடுத்த கேள்விக்கு சரியான பதில் கிடைத்து விட்டதால் அடுத்த மற்றொரு சரியான பதிலுக்கும் சேர்த்து மார்க 5/7.
தம்பி
எது தப்பு என்று முடிவு அறிவிக்கு முன்பே சொல்வதுதான் தப்பு.
1)Akshaye Khanna
2)Vali
4)Bentley Mitchum
5)Thenali
6)poovelam ketupar
வேந்தன் எழுதிய ஐந்து விடைகளும் சரி. மீதமுள்ள இரண்டு?
// 1. ஜோதிகாவின் திரையுலக முதல் நாயகன் யார்? //
அஜீத்
// 2. தமிழில் ஜோ நடித்த முதல் படம் எது//
வாலி
// 3. ஜோதிகா சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருது பெற்ற படம் எது?//
சந்திரமுகி?
// 4. ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்த அயல்நாட்டு நடிகர் யார்? //
ஜான்.. (முழுப் பெயர் தெரியாதே!)
//5. நக்மாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடைப்பட்ட மற்ற சகோதரி யார்? //
ரோஷனி
// 6. ஜானகி என்ற கதாபாத்திரத்தில் ஜோ நடித்த படம் எது? //
தெனாலி
// 7. ஜோதிகா சூர்யாவுடன் நடித்த முதல் படம் எது? //
பூவெல்லாம் கேட்டுப் பார்
ஜோவை மறக்க முடியுமா?!! இத்தனை சீக்கிரம் மறந்த தம்பிக்குக் கண்டனங்கள்..
ஜோ பற்றிய புதிருக்குப் பதில் சொன்னால் சவுக்கடி எனில் நான் தொடர்ந்து சவுக்கடிகளை வாங்கிக் கொண்டே இருப்பேன்..!!!
ஆமாம் வலைஞன், எங்க இளையதளபதியும் ஜோவும் சேர்ந்து நடித்த படங்களுக்கு உங்க பதிவில் ஏன் இட ஒதுக்கீடில்லை?!!!
பொன்ஸ்
நான்கு மட்டுமே சரி. 4/7
முதல் கேள்விக்கு இருவர் சரியான விடை எழுதியுளளனர். மறறவர்கள் எழுதிய அஜித் என்ற விடை தவறானது. கேள்வியை மறுபடி படித்துப் பார்க்கவும்.
யாருமே எல்லா விடைகளையும் சரியாக எழுதாததால் பரிசை அதிகபட்ச மதிப்பெண் பெற்ற தம்பிக்கே வழங்க தீர்மானித்து விடலாமா? என்ன "தம்பி" பரிசை வாங்க தயாரா?
3)Peralagan
5)Roshni
வேந்தன் விடைகள் எல்லாம் சரிதான். ஆனால் முதலில் நீங்கள் வரிசை மாறி எழுதி விட்டீர்கள். கவனிக்காமல் மதிப்பெண் போட்டு விட்டதால் மறுபடி எல்லாம் வரிசையாக எழுதவும்.
பரிசு வாங்கத் தயாரா?
பரிசு கொடுக்கிறேன்னுட்டு கடைசியில் நக்கீரன் மாதிரி குற்றம் கண்டு பிடிக்க மாட்டிங்களே! ஏன்னா கடைசி 2 பதில்கள் என் நண்பரிடம் கேட்டு வாங்கியது.
So i think i am not elegible
பரவாயில்லை வேந்தனே. குற்றம் குற்றமாயினும் சரியான விடையை சரியான வரிசையில் எழுதினால் பரிசு வழங்க இம்சை அரசன் தயாராக இருக்கிறார்.
1)Aksay Kanna
2)Vali
3)Peralagan
4)Bentley Mitchum
5)Roshini
6)Thenali
7)Poovellam ketupar
//மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்காமல் காப்பியடிக்காமல் பதில் கூறும் புலவருக்கு இம்சை அரசன் பரிசுகளை 100 சவுக்கடிகளாக வழங்குவார்.//
மாப்பு வெச்சிட்டாண்டா ஆப்பு!!!!
டும்... டும்... டும்... இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் வேந்தன் சரியான பதிலை எழுதிவிட்டதால் அவருக்கே வெற்றி.
இன்னும் சில நிமிடங்களில் எல்லா பதில்களும் பிரசுரிக்கப் படும்.
சரி அதிருக்கட்டும் வேந்தன் பரிசைப் பெற்றுக் கொள்ளத் தயார்தானே? ஒ என்ன பரிசுன்னு கேட்கிறீங்களா?
அதை ஏற்கனவே சொல்லியிருந்தோமே. என்ன அமானுஷ்ய ஆவி வந்து மாயமாக மறைய வெச்சுடிச்சா?
சரி பரவாயில்லை. இதையே ஒரு போட்டியா அறிவிச்சிடலாம்.
இம்சை அரசன் பரிசுகளை _ _ _ _ _ _ _ _ _ _ _ _ வழங்குவார். இந்த இடைவெளியில் மறைந்திருக்கும் விடையை கண்டு பிடிங்க பார்க்கலாம்.
தலை வலை,
அதான் எழுதிட்டமே..
//ஜோ பற்றிய புதிருக்குப் பதில் சொன்னால் சவுக்கடி எனில் நான் தொடர்ந்து சவுக்கடிகளை வாங்கிக் கொண்டே இருப்பேன்..!!! //
அப்பால என்ன? ஓ. நம்பரா.. வேந்தன் சாரு, 100 சவுக்கடி வாத்தியாரே..
பொன்ஸ் அது என் பார்வைக்கு தப்பி இருந்தது. publish all போட்ட பிறகுதான் பார்த்தேன். வேந்தன் கூட அதுக்குள்ள பிடிச்சிட்டாரே.
அமானுஷ்ய ஆவி கூட பதில் சரியா எழுதியிருக்கு போல இருக்கே. ஆனா தனித்தனியா...
எல்லோருக்கும் நன்றி. இது சும்மா ஜாலிக்கு... அதனால் தவறாக நினைக்க மாட்டீர்கள் தானே?
5/7 மதிப்பெண்களுக்கேற்ப பரிசு வந்து சேரவில்லையென்றால் உங்களை எங்கள் உலகிற்கு கடத்தி விடுவோம்.
ஐயோ ஆவியே அப்படியெல்லாம் அவசரப்பட வேண்டாம். உனக்கு 7/7 மதிப்பெண்களும் போட்டு விட்டோம். பரிசையும் உனக்கே கொடுத்து விடுகிறோம். வாங்க நீ தயார் தானே?
தல தீர்ப்ப மாத்து ஆவிக்கு 6 மார்க் தான...
அழுகுனி ஆட்டம் இது! நான் வல்ல!
இந்தி சினிமாவ எல்லாம் சேக்ககூடாது, அப்படியே சேக்கணும்னா கேள்விய மாத்திகேக்கணும்!
தம்பியின் மென்மையான கண்டனங்கள்!
இந்த செப்டம்பர் 11ல்
இன்னொரு குண்டு
ஜோ வின் கல்யாணம்.
Post a Comment