2006-09-24

ஒரு கதை! ஒரு போட்டி!!

கதை கேட்பது என்பது சிறு வயதில் எல்லோருக்குமே மிகவும் விருப்பமான விஷயம் தான். கூட்டுக் குடும்பமாக எல்லோரும் இருந்த காலத்தில் தாத்தா பாட்டிகள் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்வது வழக்கமாக இருந்தது. இன்றைய அவசரமான உலகில் குடும்பங்கள் சிதைந்தும் பிரிந்தும் பெரியவர்கள் தனியாக குழந்தைகள் தனியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தமாகி விட்டது. இன்றைய குழந்தைகளுக்கு பெரியவர்களிடம், தங்கள் தாத்தா பாட்டியிடம் கதை கேட்கும் பாக்கியம் இல்லை.

இன்று அவர்களுக்கு கார்ட்டூன் சானல்கள் சொல்லும் கதைகள் தான் தஞ்சம். அன்று பெரியவர்கள் சொன்ன கதைகளில் லாஜிக் இல்லாமலிருக்கலாம். மூடநம்பிக்கைகள் மிகைப்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் கதை என்னும் வற்றாத ஊற்று கடந்து செல்லும் பரிமாணங்கள் எட்டாத உயரத்துக்கு செல்லும். டிஜிட்டல் கதைகளின் கிராபிக்ஸ் மாயங்களைவிட பழங்கதைகளில் ஜாலங்கள் அதிகம்.

என்றோ கேட்டகதைகளின் நினைவலைகளை மீட்டி சொந்தக் கற்பனை கலந்து புதிய களத்தில் சற்றே பெரிய கதையாகச் செய்தேன். வலைப்பதிவில் ஒரு புதிய முயற்சியாக அதை சிறுசிறு பாகங்களாக ஒரு பதிவில் இட்டேன். கதையும் முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு அத்தியாயம் பாக்கி.

இங்கே...
கதைகேட்பதில் ஆர்வமுள்ள, புதிர்களை விடுவிக்க துடிப்புள்ள அன்பு நண்பர்களுக்காக என் தொடர்கதையிலிருந்து ஒரு சிறு போட்டி.

கதை இங்கே

போட்டிக்கான கேள்வி(கள்) இதுதான்

1) கதையின் ஆரம்பத்தில் வரும் பிணம் எவ்வாறு இறந்திருக்கக் கூடும்?

2) நாகமணியை கிழவர் என்ன செய்திருப்பார்?

கற்பனைக் குதிரையை ஓடவிடுங்கள்!

3 comments:

Anonymous said...

சவுக்கடி ஏதும் மறைஞ்சிருக்கா

வலைஞன் said...

that's just for fun.

இங்கே இந்த மாதிரியெல்லாம் ஒண்ணும் கிடையாது. பரிசு எதுவும் இல்லை. ஆனால் கற்பனைக்கு ஒரு போட்டி அவ்வளவுதான்.

வேந்தன் said...

டக்!டக்!டக்!
இருங்க,இப்பதான் கற்பனை குதிரைய தட்டி விட்ருக்கேன்.