இன்று தேர்தல் பிரச்சாரக்களத்தில் சுய உதவிக்குழுக்களின் வாக்குகள் ஜெயலலிதாவுக்கே கிடைக்கும் என்பதாக பேசப்படுகிறது. அதற்குக் காரணமாகக் கூறப்படுவது ஜெயலலிதா தான் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி மகளிர் பொருளாதார தன்னிறைவு பெற வழிகாட்டினார் என்பதாகும்.
சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த நடிகரும் இயக்குநருமான விசு தன் ஜெயா டிவி பேட்டியில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டது இந்த விஷயம்தான். கிராமங்கள் தோறும் மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை உருவாக்கியதற்காக பெண்கள் அவரைப் போற்றுகின்றனர் என்பது அவரது கருத்து.
இது உண்மையா?
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டனவா?
தமிழகத்தில் மட்டுமே சுய உதவிக்குழுக்கள் உள்ளனவா?
இது ஜெயலலிதாவின் மூளையில் உதித்த மகத்தான திட்டம் என்பது உண்மையா?
வலைப்பதிவர்களின் கருத்தறிய விரும்புகிறேன். குறிப்பாக வங்கிப்பணி தொடர்புடைய தமிழினி முத்து மற்றும் டிபிஆர்ஜோசப் அவர்கள் ஆகியோர் இதுபற்றி கூடுதல் தகவல் தரமுடியும்.
2006-05-04
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டனவா?
தமிழகத்தில் மட்டுமே சுய உதவிக்குழுக்கள் உள்ளனவா?
இரண்டுக்கும் ஒரே பதில்தான். நிச்சயமாக இல்லை.
விசு ஒரு சந்தர்ப்பவாதி. சுயநலம் பிடித்தவர். அவருக்கும் சன் டிவிக்கும் இடையில் ஏதோ பிரச்சினை இருக்கவேண்டும். அல்லது பணத்திற்கு ஆசைப்பட்டு ஜெயா டிவிக்கு தாவியிருக்கவேண்டும். அவரருடைய அரட்டையரங்கம் பிரபலமடைந்ததே சன் டிவியால் தான்.. நன்றி கெட்ட மனிதர்..
இப்படி பொய் சொல்லி வாக்கு சேகரிப்பதற்குப் பதிலாக ஜெயலலிதா தூக்கில் தொங்கலாம்!
பதிலுக்கு நன்றி.
ஆனால் ஜோசப் சார் உங்களிடம் நான் கேட்க விரும்பியது அரசியல் ரீதியான பதிலல்ல.
மாறாக வங்கி அதிகாரி என்ற முறையில் சுய உதவிக் குழுக்கள் எந்தக்கால கட்டத்தில் என்ன நோக்கத்தில் உருவாக்கப்பட்டன என்பது குறித்த நிர்வாக ரீதியான புள்ளி விவரங்களையே நான் எதிர்பார்த்தேன். சுய உதவிக்குழுக்களுக்கு நேரடித் தொடர்புடையவை வங்கிகளே என்பதால் இவை குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால் தான் இதை கேட்டேன்.
மேலும் இது குறித்து யாரும் பதிலளிக்கலாம்.
ஜோசப் சார்..உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.
விசு பிரபலமடைந்ததே சன் டி.வியால் தானா? அடப்பாவமே. சன் டி.வி. வருவதற்கு முன்னரே திரைப்படத்தில் தேசிய விருது பெற்றவர் அவர்.
அது சரி... அரட்டை அரங்கம் நிகழ்ச்சி ஆரம்பித்த போது ஏன் ஒரு டி.பி.ஆர். ஜோசப்பை வைத்து அதை நடத்த சன் டி.வி. முன் வரவில்லை? அதை யோசியுங்கள். சன் டி.வியால் தூக்கி எறியப்பட்டவர்கள் அனைவருமே பணத்துக்காக போனவர்கள் என்பது டூ மச்சாக தெரியவில்லை?!
இப்போது பதிவுக்கு சம்பந்தமான பதில்..
இது ஜெயலலிதாவின் மூளையில் உத்த்த திட்டமா என்னவோ தெரியாது.. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சிற்ப்பாக செயல்படுத்தப்பட்டிருக்கும் திட்டம். அதனால் தான் அதை நாங்கள் தான் ஆரம்பித்தோம் என்று பலரும் போட்டிக்கு வருகிறார்கள். பல மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது என்றால், எந்த எந்த மாநிலங்களில் என்று தெரியப்படுத்தலாமே!
அனானி...
இம்மாதிரியான உணர்ச்சி வசப்பட்ட பதில்களை அல்ல ஆதாரப்பூர்வமான விவரங்களை கூறுங்கள்
நண்பரே,
சுய உதவி குழுக்கள் மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டு துவக்கப்படுபவை.
மகளிர் சுயஉதவி குழு முதலில் சக்சஸ் ஆனது பங்களாதேசில்... பின்னர் படிபடியாக இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது.
மற்ற மாநிலங்களின் கதை எனக்கு தெரியாது.பொதுவாக கூட்டுறவு துறை வலுவாக(ஒப்பீட்டளவில்) இருக்கும் தமிழ்நாட்டில் இது வெற்றி அடைவதில் பிரச்சினை இல்லை.
அரசாங்கத்தில் வங்கிகளில் முதலில் ஐ.அர்.டி.பி எனப்படும் கடன்உதவி திட்டம் இருந்தது.மத்திய அரசாங்கத்துடையதுதான்.அதை நீக்கிவிட்டு இனி சுய உதவி குழுக்கள் மூலமாகத்தான் கடன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறிவிட்டது.
மானிய பணம் முதலில் மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுக்கும்.மாநில அரசு மாவட்ட கலெக்டருக்கு கொடுக்கும்.மாவட்ட கலெக்டர் மூலமாக பஞ்சாயத்து அலுவலகம் மூலமாக வங்கிகளுக்கு வரும். இதில் மாநில அரசின் பங்கு இல்லை அல்லது மிகவும் சொற்ப அளவோ எனக்கு உறுதியாக தெரியாது.
திட்டம் டிசைன் செய்யப்பட்டது மத்திய அரசால்தான்.கலைஞர் ஆட்சியில் 96-01 அப்போதே இவை துவக்கப்பட்டுவிட்டன.
// இதில் மாநில அரசின் பங்கு இல்லை அல்லது மிகவும் சொற்ப அளவோ எனக்கு உறுதியாக தெரியாது.
திட்டம் டிசைன் செய்யப்பட்டது மத்திய அரசால்தான்.கலைஞர் ஆட்சியில் 96-01 அப்போதே இவை துவக்கப்பட்டுவிட்டன.//
கேக்குறவன் கேணயா இருந்தா.... மத்திய அரசு சொன்னாலும் அதை செயல்படுத்துவது மாநில அரசு தான். அப்படி மத்திய அரசு செயல்படுத்துவது என்றால், வேறு எந்த எந்த மாநிலங்களில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று கூற முடியுமா? அப்படி கருணாநிதி காலத்தில் இது ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அதையே ஒரு பெரிய சாதனை போல அவர்கள் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்களோ?!
மாயவரத்தான்
விசுவைக் குறித்து...
விசு பிரபலமடைந்தது சன் டிவியால் அல்ல. மாறாக விசுவின் பிரபலத்தை நிகழ்ச்சியின் பிரபலத்துக்கு சன்டிவி பயன்படுத்திக்கொண்டது என்பதே உண்மை. அதே சமயம் விசு ஒருபோதும் திமுகவோடு நெருக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக அரட்டை அரங்கத்தை நடத்திக்கொண்டிருந்த காலத்திலேயே ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் விசு ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் இருந்திருக்கிறார். அப்போது தமிழக அரசுக்காக ஒரு முழுநீள சமூகவிழிப்புணர்வுப் பிரச்சார திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை ஜெயலலிதா விசுவுக்கு வழங்கியிருக்கிறார்.
சன் டிவி அப்போது திமுகவின் அரசியலோடு நேரடி தொடர்பு கொண்டிருக்க வில்லை என்பதால் இருதரப்புக்குமே அது ஒரு பிரச்சினையாக இல்லை. ஆனால் அப்போதைய ஜேஜே டிவியுடனான போட்டியும் பின்னர் வந்த சட்டமன்ற தேர்தலின் போது (1996) ஜெயலலிதாவின் ஊழல் விவகாரங்களை வெளியிட சன்டிவியை திமுக பயன்படுத்திக் கொண்டதும் அரசியல் களத்தில் சன் டிவி நேரடியாக திமுகவின் கருவியாக வெளிப்படத் தொடங்கியது. இதன்பிறகே கலைஞர்களும் திமுக ஆதரவு, அதிமுக ஆதரவு எனற பார்வைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சுய உதவிக்குழுக்கள் குறித்து...
//ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டிருக்கும் திட்டம்.//???
உண்மையில் சுய உதவிக்குழுக்களை அரசு உருவாக்குவதில்லை. தொண்டு நிறுவனங்களே உருவாக்கி செயல்படுத்துகின்றன. வங்கிகள் தான் கடனை வழங்குகின்றன. மத்திய அரசுதான் மானியம் வழங்குகிறது. மத்திய அரசின் நிதியை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொறுப்பில் உள்ள, மாநில அரசின் நிர்வாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை தான் பயற்சிக் கையேடுகளை வழங்குகிறது. இத்துறையின் அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் தான் சுய உதவிக்குழு மாநாடுகளில் கலந்து கொண்டபோது இதில் அரசியல் சாத்தியக்கூறுகளை நன்கு உணர்ந்து சுய உதவிக் குழுக்களுடன் நேரடித் தொடர்பை வளர்த்துக் கொண்டார். சுய உதவிக் குழுக்களின் வாக்கு வங்கியால் தேர்தலில் வெற்றி பெற்று விட முடியும் என்று எண்ணியே அவர் திமுகவிலிருந்து விலகினார். ஆனால் அதிமுகவும் பின்னர் அவரைக் கைவிட்டது நாம் அறிந்ததே.
ஜெயலலிதா ஆட்சியில் அவ்வப்போது சுய உதவிக்குழு மாநாடுகள் நடத்தி அமைச்சர்கள் குழுக்களுட் தொடர்பை உறுதிப்படுத்திக் கொண்டனர். பயிற்சிக் கையேடுகளில் ஜெயலலிதாவின் படங்கள் அச்சிடப்பட்டு குழுக்களின் எல்லா வளர்ச்சிக்கும் அதிமுக அரசே காரணம் என்பதான கருத்துரு கட்டமைக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பாமர மகளிர் மத்தியில் சுய உதவிக்குழுக்களின் வெற்றிக்கு ஜெயலலிதாவே காரணம் என்ற கருத்து நிலைபெற்று விட்டது.
சுய உதவிக்குழுக்ளை உருவாக்கி பெரும் சாதனை புரிந்ததற்காக சின்னப்பிள்ளை என்ற பெண்மணி வாஜ்பாயிடம் விருது பெற்ற போது தமிழகத்தில் ஆட்சி புரிந்தது ஜெயலலிதா அல்ல. ஆனால் அப்போது குழுக்களில் அரசியல் புகுந்திருக்கவில்லை.
அரசுத் திட்டங்கள் அறிவிக்கப்படும் அரசு விழாக்களில் எல்லாம் சுய உதவிக் குழுக்கள் முன்னிலைப் படுத்தப்பட்டன. கூட்டம் சேர்க்கவும் அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். பல அரசுத் திட்டங்கள் குழுக்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டன. இவை குழுக்களுக்கு அரசுடன் (ஆளுங்கட்சியுடன்) அதிக தொடர்பை உறுதிப்படுத்தின. ஆனால் உண்மையில் குழுக்களின் நேரடி செயல்பாடுகளில் மாநில அரசின் பங்கு மிகக் குறைவானது என்பதே உண்மை.
மாயவரத்தான் அளவிற்கு எனக்கு அறிவில்லை..நான் பார்த்தவரை எங்கள் வங்கியில் செய்வதை சொன்னேன்.
முத்து
நீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
சுருக்கமாக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.
ஐஆர்டிபி விஷயம் உட்பட எல்லாம் மிகவும் சரியானதே.
1999-2000 காலகட்டத்தில் சுய உதவிக்குழு உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலும் அதே காலகட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்காக ஒரு இதழையும் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறேன்.
சம்பந்தப்பட்ட உங்களில் சிலரின் புள்ளி விவரங்களையும் பெறமுடியும் என்பதற்காகவே இதை ஒரு விவாதமாகக் கொண்டு செல்லும் நோக்கில் கேள்வியாக எழுப்பினேன்.
இது தான் வார்த்தை விளையாட்டு.
TBR சொன்னது - "அவரருடைய அரட்டையரங்கம் பிரபலமடைந்ததே சன் டிவியால் தான்.. நன்றி கெட்ட மனிதர்.."
மாயவரத்தார் சொல்வது - "விசு பிரபலமடைந்ததே சன் டி.வியால் தானா? அடப்பாவமே. சன் டி.வி. வருவதற்கு முன்னரே திரைப்படத்தில் தேசிய விருது பெற்றவர் அவர்.
இரண்டும் ஒன்றா??
மாயவரத்தாரே, TBR MKகு தான் தன்னுடைய வாக்கு என்பதற்காக அவர் மேல் கோபம் கொள்ளவேண்டாம். அம்மா வந்துவிட்டால் ரெண்டு ஆட்டோ அனுப்பிவிடலாம்.
ரெண்டு ஆட்டோ :-)))
//# arunmoli கூறுவது:
இது தான் வார்த்தை விளையாட்டு.
TBR சொன்னது - "அவரருடைய அரட்டையரங்கம் பிரபலமடைந்ததே சன் டிவியால் தான்.. நன்றி கெட்ட மனிதர்.."
மாயவரத்தார் சொல்வது - "விசு பிரபலமடைந்ததே சன் டி.வியால் தானா? அடப்பாவமே. சன் டி.வி. வருவதற்கு முன்னரே திரைப்படத்தில் தேசிய விருது பெற்றவர் அவர்.
இரண்டும் ஒன்றா??//
நச்சை நச் எனச் சொன்னீர். இந்த லட்சணத்தில் ஜோசப் சார் உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை என்ற வாக்கியம் வேறு..ம். அம்மாவை ஆதரிக்க வேண்டுமென்றால் இவரே இப்படியெல்லாம் திரிக்கிறார் என்றால்,வைகோ எவ்வளவு திரிக்க வேண்டும்...
வலஞைன், இந்தப் பதிவைத்தான் போட்டு வாங்கும் பதிவென்பார்களோ? இந்த குழுக்களைப் பற்றி இவ்வளவு தெளிவாய் அறிந்து வைத்துக் கொண்டு, சும்மாவேணும் மற்றவர்களைக் கேட்டு விட்டு, அப்புறம் அலசி காயப் போட்டுட்டீங்களே, மாற்றோர் காய்ந்து போகும்படி!!
கற்றது கடுகளவு கல்லாததது கடலளவு
நமக்குத் தெரிந்ததற்கு மேல் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. எனது அனுபவங்கள் ஒருவிதம் என்றால் மற்றவர்கள் வேறொரு விதமான அனுபவங்களைச் சந்தித்திருக்கலாம். குறிப்பாக வங்கிகளில் பணியாற்றுவோர் பல்வேறு குழுக்களை, அவர்களின் பிரச்சினைகளை, இயல்புகளை, எண்ணங்களை நேரடியாக கண்டுணர்ந்து அறிந்திருக்க வாய்ப்புண்டு. அதனால் தான் வங்கியாளர்களைக் குறிப்பிட்டுக் கேட்டேன்.
ஆனால் ஜோசப் சார் நான் நினைத்த விஷயம் பக்கமே வராமல் வேறு திசைக்கு போய்விட்டார். முத்து சரியாக, ஆனால் சுருக்கமாக கூறி முடித்து விட்டார்.
வெறுமனே எனக்குத் தெரிந்ததை மட்டும் கட்டுரையாக எழுதி விட்டால் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது? நீங்களும் கொஞ்சம் பகிர்ந்து கொண்டால் தான் சுவையாக இருக்கும்!
நங்கநல்லூர் பார்ட்டி கொல்லைப்புறக் கதவைத் தட்டுகிறது. உள்ளே விடலாமா?
//அவரருடைய அரட்டையரங்கம் பிரபலமடைந்ததே சன் டிவியால் தான்.. நன்றி கெட்ட மனிதர்//
நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வந்த பாடில்லை. அரட்டை அரங்கம் பிரபலமானதே சன் டி.வி.யால் தான் என்றால், சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஜெயா டி.வி.யால் பிரபலப்படுத்தப்படுமா? இதை நான் திரிப்பதாக ஒருவர் கதையளக்கிறார். இதில் திரிப்பதற்கு என்ன இருக்கிறது? அதன் பிறகு வைகோ வேறு - சம்பந்தமேயில்லாமல். உங்களுக்கு கருணாநிதிக்கு ஜிங்ஜக் போட ஆசை இருந்தால், தாராளமாக போட்டுக் கொள்ளவும். அதற்காக அடுத்தவரை நச்சு என்று சொல்லி உங்கள் 'நச்சை' வெளிப்படுத்த வேண்டாம்.
அரட்டை அரங்கத்தினால் தான் விசு பிரபலமானாரா? பிரபலமான விசுவை கூப்பிட்டு அரட்டை அரங்கத்தை நடத்தியதன் மூலமாக சன் டி.வி.க்கு புகழ். இன்றைக்கு வேண்டுமானால் சன் டி.வி. உச்சத்தில் இருக்கலாம். ஆனால் அது தோற்றுவிக்கப்பட்ட போது விசு போன்றோரின் ஆதரவு கண்டிப்பாக தேவைப்பட்டிருக்கிறது. அப்படியில்லையெனில் எதற்காக விசு? அட்ரஸ் இல்லாத கிருஷ்ணா போன்றோரை கூப்பிட்டு அரட்டை அரங்கத்தை நடத்த சொல்லியிருக்கலாமே?!
ஆக, ஜெயலலிதா, சுய உதவிக் குழுக்கள் மீதான விஷயத்தைத் திசைதிருப்பியாகிவிட்டது. நடத்துங்க நடத்துங்க. புல் என்பது கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடு தின்ற வஸ்து என்று ரவுண்டபவுட் ராமாயணம் எழுதுபவர்களை என்ன சொல்லியும் திருத்த முடியாது.
Post a Comment