2006-10-01

கதைக்கவிதை -தேன்கூடுபோட்டிக்கு-4

விடுதலை?

பத்து மாதம்
பந்தச் சிறையில்...
இடையில் ஏதோ வெளிச்சம்.
அவள் பெண்ணென்று அறிய
அநீதியான சோதனை...
அறிந்ததும்
ஏதோ
விஷமாத்திரை
விரைந்து வந்தது...
எப்படியோ
தப்பிப் பிழைத்து
விடுதலைக்காக
காத்திருப்பு.
அந்த நாளும் வந்தது.
சுதந்திரக்
காற்றைச்
சுவாசிக்கும் ஆர்வத்தில்
அவள் அறியாமல் போனது
வெளியே
காத்திருக்கும்
கள்ளிப் பால் சொட்டு.

5 comments:

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

வலைஞன் said...

நன்றி அலெக்ஸ்

கோழை said...

நல்லா இருந்தது அதேநேரம் சிந்திக்கவும் தூண்டியது

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல சிந்தனை கவிதையும் நல்லா இருந்தது.

வலைஞன் said...

விமர்சனங்களுக்கு நன்றி குமரன்