2006-10-11

தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள்

உலகின் அதிசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலை top universities தளம் வெளியிட்டுள்ளது. அது குறித்த வெற்றியின் பதிவு இங்கே.

இங்கே நான் கூற வந்தது இந்தியப் பல்கலைக் கழகங்கள் எத்தனை இதில் இடம் பெற்றுள்ளன என்பதைப் பற்றியது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் இருநூறு பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் மூன்று மட்டும் இடம் பெற்றுள்ளன.

தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 50 வது இடத்தில் இருந்த ஐஐடி இந்த ஆண்டு 57 வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 84 வது இடத்தில் இருந்த ஐஐஎம் இந்த ஆண்டு 68 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 192 வது இடத்தில் இருந்த ஜவகர்லால் நேரு பல்கலை இந்த ஆண்டு 183 வது இடத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக் கழகங்களின் நிலையே இதுவென்றால் மற்ற பல்கலைக்கழகங்கள் உலகத்தரத்தில் எந்த இடத்தில் இருக்கும்?

கணினித்துறையில் சாதனைகளைப் புரிந்து வரும் இந்தியர்கள் இந்த உலகத்தரமில்லாத பல்கலைக்கழகங்களில் படித்து வந்தவர்களே என்று எண்ணும்போது வியப்பாகவும் இருக்கிறது.

7 comments:

அசுரன் said...

இங்கு ஒரு கேள்வி எழுகிறது,

பிறகு ஏன் இந்திய சீன மூளைகளை பன்னாட்டு கம்பேனிகள் விரும்பி கொத்திச் செல்கின்றன.


க்ளு:
சமீபத்திய ப்ரொஜெக்ட் தோல்விகள் குறித்து DRDO இயக்குனர் கூறீயது - 'இந்தியாவின் சிறந்த மூளைகளை கவரும் வல்லமையை இந்திய ஆராய்ச்சி கழகங்கள் இழந்து விட்டன'.

இதை ஆங்கிலத்தில் brain drain என்பர்.

அசுரன்

வலைஞன் said...

உண்மை.

நமது கல்வியாளர்களின் பார்வை மற்றும் கல்வி முறையில் இருக்கும் பிறழ்வுகளால் தான் அதி சிறந்த மூளைகளை அயல் நாடுகளுக்கு தத்துக்கொடுக்க வேண்டிய நிலைமை.

இருக்கும் மூளைகளை வளர்க்க மட்டுமல்ல பாதுகாக்கவும் நமது கல்வி மையங்களுக்கு திறன் குறைந்து வருகிறது.

ரவி said...

ஏங்க, நம்ம பல்கலைகழகங்களில் இருந்து உலகத்தரமான மாணவர்கள் வெளிவரல..

ஆட்டு மந்தைக்கூட்டம் மாதிரி என்பதே எனது கருத்து..

அரதப்பழசான கல்வித்திட்டம்....

அய்யா, மென்பொருள் துறையில் நாம் என்ன சாதித்துவிட்டோம் என்று குதிக்கிறீர்..

சி,சி ++, மைக்ரோசாப்ட் மென்பொருளை கண்டுபிடித்தீரா ? இண்டெல் சிப்செட்டை கண்டுபிடித்தீரா ? விபி ? டாட் நெட் ?

அவர்கள் கண்டறிந்து - டிசைன் செய்து - கம்பைலர் எழுதி, இண்டரப்ட்ஸ் எழுதியதை, உபயோகிக்கிரீர்..

அதை எந்த ஆட்டுமந்தைக்கூட்டமும் செய்யுமே ?

குறைந்த ஊதியத்தை வாங்கிக்கொண்டு ?

பொதுவாக பேசினால் கூட,

அய்யா, இந்தியா என்ன உலகிற்க்கு வழங்கி இருக்கிறது ?

இட்லி / தோசை ?

அதை விடுத்து, என்ன ? சொல்லிக்கொள்வது போல் என்ன ?

கரண்டை கண்டுபிடித்தோமா ? தொலைபேசியை கண்டுபிடித்தோமா ?

சாதிப்பெயரை சொல்லியும் / மதத்தின் பெயராலும் அடித்துக்கொள்ள கண்டுபிடித்தோம்...

வயத்தெரிச்சலை கிளப்பாதீரும்.

வலைஞன் said...

//அய்யா, இந்தியா என்ன உலகிற்க்கு வழங்கி இருக்கிறது ?//

பூச்சியத்தை மறந்து விட்டீர்களே ரவி. :-))

எந்தவொரு கண்டுபிடிப்பையும் தனியாக கண்டு பிடிக்கவில்லைதான். ஆனாலும் பல கண்டுபிடிப்புகளுக்கு துணை நின்றவர்கள் தான் இந்தியர்கள்.

கல்வி முறையின் கோளாறால்தான் அறிவுத்துடிப்பு உச்சத்தில் இருக்கும் மாணவப் பருவத்தில் அதற்குரிய வாய்ப்புகளோ ஊக்கமோ அவர்களுக்கு இங்கே கிடைப்பதில்லை.

Anonymous said...

'இந்தியாவின் சிறந்த மூளைகளை கவரும் வல்லமையை இந்திய ஆராய்ச்சி கழகங்கள் இழந்து விட்டன'.

True as best universities abroad
and industry is ready to absorb
them.What is the solution.
Asuran will say 'reservation for OBCs' :).The brain drain theory
is outdated.In a globalised world
knowledge and skills matter most
not caste or religion.Will the
'left' lunactics ever understand
this.

லிவிங் ஸ்மைல் said...

// கணினித்துறையில் சாதனைகளைப் புரிந்து வரும் இந்தியர்கள் இந்த உலகத்தரமில்லாத பல்கலைக்கழகங்களில் படித்து வந்தவர்களே என்று எண்ணும்போது வியப்பாகவும் இருக்கிறது. //

இந்தியாவில் சில மருத்துவக் கல்லூரிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக நண்பர் ஒருவர் அடிக்கடி புலம்பிக்கொண்டிரூப்பார்.

any ideas....?

லிவிங் ஸ்மைல் said...

// கணினித்துறையில் சாதனைகளைப் புரிந்து வரும் இந்தியர்கள் இந்த உலகத்தரமில்லாத பல்கலைக்கழகங்களில் படித்து வந்தவர்களே என்று எண்ணும்போது வியப்பாகவும் இருக்கிறது. //

இந்தியாவில் சில மருத்துவக் கல்லூரிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக நண்பர் ஒருவர் அடிக்கடி புலம்பிக்கொண்டிரூப்பார்.

any ideas....?